கல்கத்தா வங்கி
கல்கத்தா வங்கி (தற்போதைய பாரத ஸ்டேட் வங்கியின் முன்னோடி) 1806 சூன் 2இல், ரிச்சர்டு வெல்லீசுலி என்பவரால் தொடங்கப்பட்ட வணிக வங்கியாகும். மராத்தா, திப்பு சுல்தான் ஆகியோருக்கு எதிரான போருக்கு தேவையான நிதியை திரட்டுவதற்காகவே இவ்வங்கி நிறுவப்பட்டது. இதுவே இந்தியாவில் தொடங்கப்பட்ட முதலாவது வங்கியாகும். இவ்வங்கி, 1809 சனவரி 2 அன்று வங்காள வங்கி என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. கிளைகள்வங்காள வங்கி, ரங்கூன் (1861), பாட்னா (1862), மிர்சாபூர் (1862), வாரணாசி (1862) ஆகிய இடங்களில் தனது கிளைகளைத் துவங்கியது. 1862ஆம் ஆண்டில் டாக்காவில் இயங்கிய டாக்கா வங்கியை (தொடக்கம் 1846) தன்னுடன் இணைத்துக் கொண்டு தனது கிளையைத் தொடங்கியது.[1] தொடர்ந்து கான்பூரில் தனது அடுத்த கிளையைத் தொடங்கியது. இந்த வங்கி ஆபத்துக்களை எதிர்க்கத் தயங்கியது. மூன்று மாதங்களுக்கு மேல் கடன் கொடுக்கவில்லை. இதனால் பிரிட்டிஷ் மற்றும் இந்திய உள்ளூர் வணிகர்கள் தனியார் வங்கிகளைத் தொடங்கினர். அவற்றில் பல தோல்வியடைந்தன. மிகவும் புராதனமான வங்கியின் தோல்விக்குப் பிறகு துவாரகநாத் தாகூர் பிரித்தானிய நிறுவனங்களுடன் இணைந்து யூனியன் வங்கியை (1828) நிறுவினார்.[2] இணைப்பு1921 சனவரி 27 அன்று இவ்வங்கியும், இதர இரு மாகாண வங்கிகளான மதராஸ் வங்கி, பம்பாய் வங்கியுடன் இணைக்கப்பட்டு இந்திய இம்பீரியல் வங்கி என்ற புதிய வங்கி தொடங்கப்பட்டது. இந்திய வங்கிகளை கட்டுப்படுத்தி நெறிப்படுத்தும் இந்திய நடுவன் வங்கியான பாரத ரிசர்வ் வங்கி, இந்திய இம்பீரியல் வங்கியை பாரத ஸ்டேட் வங்கி என 1955 ஏப்ரல் 30 அன்று பெயர் மாற்றம் செய்தது.[3] வங்கியின் புகழ்பெற்ற வாடிக்கையாளர்கள்வங்கியின் புகழ்பெற்ற வாடிக்கையாளர்களில் அறிஞரும் அரசியல்வாதியுமான தாதாபாய் நௌரோஜி, விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத், நோபல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூர் மற்றும் கல்வியாளர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஆகியோர் அடங்குவர்.[4] இதனையும் காண்கமேற்கோள்கள்
மேலும் காண்க
|
Portal di Ensiklopedia Dunia