காசுமோசு வங்கி

காசுமோசு வங்கி
Cosmos Co-operative Bank Ltd.
வகைபல மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கி
நிறுவுகை1906
நிறுவனர்(கள்)என். சி. கெல்கர்
தலைமையகம்புனே, இந்தியா
தொழில்துறைநிதிச் சேவைகள்
உற்பத்திகள்வணிக வங்கி
சில்லறை வங்கி
தனியார் வங்கி
வருமானம்Increase 0 (ஐஅ$0.00) (2020)[1]
நிகர வருமானம் 0 (ஐஅ$0.00) (2020)[1]
பணியாளர்2,714 (2020)
இணையத்தளம்Official Website

காசுமோசு கூட்டுறவு வங்கி நிறுவனம் (காசுமோசு வங்கி)(Cosmos Co-operative Bank Ltd), 1906-ல் நிறுவப்பட்ட இந்திய கூட்டுறவு வங்கியாகும்.

பின்னணி

காசுமோசு வங்கி இந்தியாவின் பழமையான நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாகும். காசுமோசு வங்கி தனது நூற்றாண்டு விழாவை 18 சனவரி 2006 அன்று கொண்டாடியது. இன்போசிசு பின்னாகில் முதன்மை வங்கி மென்பொருளைப் பயன்படுத்தி இதன் அப்போதைய 140 சேவை நிலையங்களின் முழு வலையமைப்பும் வங்கி இணைப்பு திட்டத்தினை செயல்படுத்திய நாட்டின் முதல் கூட்டுறவு வங்கிகளில் இதுவும் ஒன்றாகும். முப்பது ஆண்டுகளில் இத்தகைய உரிமத்தைப் பெற்ற இந்தியாவின் மூன்றாவது கூட்டுறவு வங்கியாக இது இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட வணிகர் உரிமத்தையும் பெற்றது.

வங்கியின் தலைமையகம் மகாராட்டிர மாநிலம் புனேவில் உள்ள சிவாஜி நகரின் கணேசுகிந்து சாலையிலுள்ள இதன் நிறுவன அலுவலகத்தின் காசுமோசு கோபுரத்தில் அமைந்துள்ளது.

இந்த வங்கி 18 சனவரி 1906 அன்று புனேவில் கிருஷ்ணாஜி சதாசிவ் கோர் மற்றும் சங்கர் அரி பார்வே ஆகியோரால் நிறுவப்பட்டது. காசுமாசு வங்கியின் முதல் தலைவர் சாகித்ய சாம்ராட் என்.சி கேல்கர் என்ற தாத்யாசாகேப் கேல்கர் ஆவார். திசம்பர் 1, 1990-ல், காசுமோசு வங்கி திட்டமிடப்பட்ட தகுதியினைப் பெற்றது. மேலும் 7 ஆண்டுகளுக்குள் குறுகிய காலத்திற்குள், நவம்பர் 28, 1997 அன்று வங்கிக்கு 'பல மாநில' தகுதி வழங்கப்பட்டது. இதன் மூலம் மகாராட்டிரா, குசராத்து, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்காணா மற்றும் தமிழ்நாடு ஆகிய 7 மாநிலங்களில் காசுமோசு வங்கி தன் 140 கிளைகளை நிறுவிச் செயல்படுகிறது. வங்கி 2 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களையும் 79,000 பங்குதாரர்களையும் கொண்டுள்ளது.

காசுமோசு வங்கி கூட்டுறவுத் துறையில் நாணய பெட்டகத்தினை இயக்க அனுமதி பெற்ற முதல் வங்கியாகும். காசுமோசு வங்கி புனேவில் நாணய பெட்டகத்தினைக் கொண்டுள்ளது. புனேவில் உள்ள மற்ற வங்கிகளுக்குச் சேவைகளை வழங்குகிறது.

கிளைகள்

காசுமோசு வங்கி இந்தியாவில் 140 சேவை நிலையங்களுடன் மொத்தம் 5 பிராந்திய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இவை 7 மாநிலங்களிலும் 39 முக்கிய இந்திய நகரங்களிலும் பரவியுள்ளன. இவை பின்வருமாறு:

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya