கண்டமங்கலம்
வரலாறு![]() கண்டமங்கலம் எனும் இவ்வூர் சோழர் காலத்தில் ஸ்ரீ கண்டராதித்த மதுராந்தக மங்கலம் என்ற பெயரில் விளங்கியது. கண்டராதித்த மதுராந்தகன் என்ற செம்பியன் மாதேவியின் கணவனும், உத்தம சோழனின் தந்தையும், மேறகெழுந்தருளிய சிவஞானியுமான கண்டராதித்தன் பெயரில் இவ்வூர் விளங்கியதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவ்வூரில் சிவன் கோயில் ஒன்றும், விஷ்ணு கோயில்கள் இரண்டும் என மூன்று கோயில்கள் இருந்துள்ளன. சிவன் கோயில் திருநாரிஸ்வரம் என வழங்கப்பட்டது. திருநாரிஸ்வரத்து மஹாதேவர் என இறைவன் வழங்கப்பட்டார். இரண்டு விஷ்ணு கோயில்களில் ஒன்று செய்தாங்கி விண்ணகர் என்றும் செயந்தாங்கி விண்ணகரப் பெருமான் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. திருவாய்பாடி ஆழ்வார் என்ற மற்றொரு விஷ்ணு கோயிலின் பெயராகும். கோயிலை முதலாம் இராஜேந்திரன் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. ஸ்ரீ பாதக்கிரம வித்தன் மகன் சீராளன் என்பவன் கோயிலில் விளக்கொஜக்க சபையிடம் ஆடுகளை அளித்ததை இராஜராஜன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்கோயில் மிகச் சிறியது கருவறை, அர்த்தமண்டபம் மட்டுமே கட்டப்பட்ட கோயிலாகும். கோயில் இடிந்த நிலையில் கூரையின்றி உள்ளது. சிறிய லிங்கமொன்றையும், முகலிங்கமாக காணப்படுகிறது. சதுரமான கருவறை, கருவறையின் தென்புற அதிஷ்ட்டானத்தில் கல்வெட்டுள்ளது. பராந்தகன் காலக் கோயிலாக இதனைக் கொள்ளலாம்.[5] மக்கள் வகைப்பாடுஇந்நகரத்தில் வன்னிய குல சத்திரிய (வன்னிய கவுண்டர்) சமுதாய மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர், அதற்கு அடுத்தபடியாக ஆதி திராவிடர்கள், நாயுடுகள், செட்டியார்கள், ரெட்டியார்கள், குயவர்கள் மற்றும் வண்ணார்கள் ஆகிய சமூக மக்கள் வாழ்கின்றனர். இங்கு கணிசமான அளவில் இசுலாம் மதத்தினரும் வாழுகின்றனர். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கண்டமங்கலம் நகரத்தில், 1300 குடும்பங்கள் வசிக்கின்றனர் மற்றும் இதன் மக்கள் தொகை 5460 ஆகும். இதில் 2736 ஆண்கள் மற்றும் 2724 பெண்கள் ஆகும்.[6] கண்டமங்கலம் நகரத்தில் 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 566 ஆகும், இது நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் 10.37% ஆகும். கண்டமங்கலம் நகரத்தின் சராசரி பாலின விகிதம் 996 ஆகும் மற்றும் குழந்தை பாலின விகிதம் 952 ஆகும், இது தமிழ்நாட்டின் சராசரியான 943-ஐ விட அதிகம். கண்டமங்கலம் நகரத்தின் கல்வியறிவு விகிதம் 83.65% ஆக இருந்தது, இதில் ஆண்களின் கல்வியறிவு 89.70% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 77.61% ஆகவும் உள்ளது. புவியியல்இவ்வூரின் அமைவிடம் 11°55′04″N 79°41′04″E / 11.917660°N 79.684567°E ஆகும்.[7] தக்காண இந்தியாவின் தென் கிழக்குப்பகுதியிலும் அமைந்துள்ளது. பாண்டிச்சேரி, இதன் வங்கக் கடற்சார்ந்த எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இங்கிருந்து சென்னை சுமார் 170 கி.மீ. தொலைவிலும், திருச்சி 190 கி.மீ. தொலைவிலும், பாண்டிச்சேரி சுமார் 17 கி.மீ. தொலைவிலும், விழுப்புரம் 22 கி.மீ. தொலைவிலும், கடலூர் 26 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன. போக்குவரத்துசாலை![]() விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் 45ஏ, கண்டமங்கலம் வழியாக செல்கிறது. இங்கிருந்து புதுச்சேரி மற்றும் விழுப்புரத்திற்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்துகள் செல்கின்றன. புதுச்சேரியிலிருந்து - மதகடிப்பட்டு, திருக்கனூர், மடுகரை, சன்னியாசிகுப்பம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் உள்ளூர் பேருந்துகளும் கண்டமங்கலம் நகரின் வழியாக செல்கிறது. புதுச்சேரியிலிருந்து - பெங்களூர், சேலம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளும் இந்நகரின் வழியே செல்கின்றது. விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் 45ஏ சாலையானது, ஒரே சாலையில் இருதிசைகளிலும் வாகனம் சென்று கொண்டிருந்தது. தற்போது இது நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணியானது 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.[8] தொடருந்து![]() கண்டமங்கலம் நகரின் எல்லையை பகிர்கின்ற சின்னபாபுசமுத்திரம் கிராமத்தில் தொடருந்து நிலையம் உள்ளது. இது கண்டமங்கலத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நிலையத்திலிருந்து புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, திருப்பதி போன்ற இடங்களுக்கு தினசரி தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் மங்களூரு, திருச்சிராப்பள்ளி, பெங்களூரு, கொல்கத்தா, புது தில்லி, புவனேஷ்வர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு வாரத்திற்கு ஒருநாள் மட்டும் தொடருந்துகள் செல்கின்றன. வானூர்திஇந்நகரத்தின் அருகிலுள்ள விமான நிலையம், 17 கி.மீ தொலைவில் உள்ள புதுச்சேரி வானூர்தி நிலையம் ஆகும். முக்கிய அலுவலகங்கள் & கட்டிடங்கள்பள்ளிகள்![]()
அரசு அலுவலகங்கள்![]()
வங்கிகள்
திருமண மண்டபங்கள்
திரையரங்கம்
வழிபாட்டுத்தலங்கள்இந்து
இசுலாம்![]()
கிறித்துவம்
ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் அரசியல்![]()
கண்டமங்கலம் நகரமானது, வானூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சேர்ந்த சக்கரபாணி வென்றார். 2024 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை, (திமுக கூட்டணி ) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி-ஐச் சேர்ந்த து. இரவிக்குமார் வென்றார். பொதுவான தகவல்கள்கண்டமங்கலம் நகரத்தின் நான்கு திசைகளும் பாண்டிச்சேரி மாநிலத்தின் நகரங்களால் சூழப்பட்டுள்ளது. இந்நகரில் வாழும் மக்களுக்கு கல்வி, மருத்துவம், போக்குவரத்து ஆகிய வசதிகள் மிக எளிமையாக கிடைக்கின்றது. கண்டமங்கலம் நகரின் எல்லையை பகிர்கின்ற, 1 கி.மீ தொலைவில் உள்ள அரியூரில், சிறீ வெங்கடேசுவரா மருத்துவக் கல்லூரி, பல்மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி ஆகியவை உள்ளது, மேலும் 5 கி.மீ தொலைவில் உள்ள மதகடிப்பட்டில், சிறீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, தொழிற்நுட்பக் கல்லூரி ஆகியவை உள்ளது. அருகில் உள்ள நகரங்களான திருவண்டார்கோவில், திருபுவனை, சன்னியாசிக்குப்பம் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகளும், திருபுவனையில் பிப்டிக் தொழிற்பூங்காவும் அமைந்துள்ளது. கண்டமங்கலம் சட்டமன்றத் தொகுதிகண்டமங்கலம் ஆனது 1967 ஆம் ஆண்டு முதல் 2006 வரை ஒரு சட்டமன்றத் தொகுதியாக இருந்தது. பின்னர் 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டு, இதற்கு பதிலாக வானூர் தொகுதி உருவாக்கப்பட்டது. வானிலை மற்றும் காலநிலை
படக்காட்சிகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia