செங்கல்பட்டு சந்திப்பு தொடருந்து நிலையம்
செங்கல்பட்டு சந்திப்பு தொடருந்து நிலையம் (Chengalpattu Junction railway station, நிலையக் குறியீடு:CGL) சென்னை புறநகர் ரயில்வேக்கு உட்பட்டது. இது செங்கல்பட்டில் அமைந்துள்ளது. இந்திய இரயில்வேயின் பிரிவான தென்னக இரயில்வேயின் சென்னை இரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்குகிறது.[1] வரலாறு![]() தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடம் மின்மயமாக்கலுடன், சனவரி 9, 1965 அன்று இந்நிலையம் மின்மயமாக்கப்பட்டது.[2] அமைவிடமும் அமைப்பும்![]() இது செங்கல்பட்டு நகரத்தின் நடுவில், கொலவை ஏரி கரையில் அமைந்துள்ளது. இதன் அருகில் மாநில நெடுஞ்சாலை - 58 செல்கிறது. இதன் அருகிலேயே பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [3][4][5][6] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை தொடருந்து கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, செங்கல்பட்டு சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 22.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[7][8][9][10][11][12] புறநகர் இரயில்கள்இங்கிருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து இங்கும் புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துசென்னையில் இருந்து கிளம்பும் பல தொடருந்துகள் செங்கல்பட்டு வழியாக செல்கின்றன.[13]
கீழ்க்கண்ட வண்டிகள் இங்கு நிறுத்தப்படுவதில்லை.
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia