சின்னார் கானுயிர்க் காப்பகம்
சின்னாறு கானுயிர்க் காப்பகம் (அல்லது சின்னாறு வனவிலங்குக் காப்பகம்) கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மறையூருக்கு வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் சின்னாறு பகுதியில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள 12 கானுயிர்க் காப்பகங்களில் இது ஒன்றாகும். உடுமலைப் பேட்டை-மூணார் மாநில நெடுஞ்சாலை இக்காப்பகத்தின் ஊடாகச் செல்கிறது. சின்னாறும் பாம்பாறும் இக்காப்பகத்தின் குறிப்பிடத்தக்க நீராதாரங்கள் ஆகும். இங்கு தூவானம் அருவி அமைந்துள்ளது. குடியிருப்புகள்இங்கு 11 பழங்குடி மக்களின் குடியிருப்புகள் உள்ளன. முதுவர், புலையர் ஆகியோர் குறிப்பிடத்தக்க பழங்குடியின மக்களாவர். வேளாண்மை இவர்களின் முக்கியத் தொழில். உயிரின வளம்34 வகையான பாலூட்டிகளும் 245 வகையான பறவைகளும் 52 வகையான ஊர்வனக்களும் இப்பகுதியில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 965 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன. மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia