கிழக்காசியத் திரைப்படத்துறைகிழக்காசியத் திரைப்படம் (East Asian cinema) என்பது கிழக்காசிய வட்டாரத் திரைப்படத்தைக் குறிக்கும். இது ஆசியத் திரைப்படத்தின் ஒரு வகையாகும்; ஆசியத் திரைப்படம் உலகத் திரைப்படத்துறையின் ஒரு பகுதியாகும். ஆங்கில மொழியில் இது ஆங்கிலமல்லாத பிற உலக மொழிகளின் திரைப்படங்களினைக் குறிக்கும். கிழக்காசியத் திரைப்படத் தொழில்துறைகளில் மிகச் சிறந்தனவாக சீனா, ஆங்காங், யப்பான், தென்கொரியா மற்றும் தைவான் ஆகிய நாட்டுத் திரைப்படத் தொழில்துறைகள் கருதப்படுகின்றன. இச்சொல் சிலவேளைகளில் தென்கிழக்காசியத் திரைப்படத் துறைகளையும் உள்ளடக்குவதுண்டு. அப்போது இது சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பீன்சு ஆகிய நாட்டுத் திரைப்படத் தொழில்களையும் உள்ளடக்கும். இவ்விரு வகைகளும் ஒன்றாக நெடுங்கிழக்கு ஆசியத் திரைப்படம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. கிழக்காசியாவின் பெருஞ்சந்தைகளாக சீனத் திரைப்படம், யப்பானியத் திரைப்படம், தென் கொரியத் திரைப்படத்துறை சார்ந்த தொழில்துறைகள் அமைகின்றன.[1] வகைகள்கிழக்கு ஆசிய திரைப்படத்துறையின் நோக்கம் மிகப்பெரியது மற்றும் பல்வேறு திரைப்பட பாணிகள் மற்றும் வகைகளை உள்ளடக்கியது. இருப்பினும், கிழக்கு ஆசிய திரைப்படத்துறை ஒரு பொதுவான கலாச்சார பின்னணியைப் பகிர்ந்து கொள்கிறது. பிராந்தியத் திரைப்படத்துறை பின்வருவனவற்றிற்காக சர்வதேச அளவில் பிரபலமானது:
வரலாறுஐரோப்பியத் திரைப்படத்துறை போலல்லாமல் கிழக்கு ஆசியத் திரைப்படத்துறை அமெரிக்க விநியோகஸ்தர்களால் ஆதிக்கம் செலுத்தப்படவில்லை, மேலும் ஹாலிவுட் திரைப்படத்துறையில் இருந்து தனித்துவத்துடன் வளர்ந்தது. இந் துறை1950 களில் இருந்து உலகளாவிய பார்வையாளர்களைக் கொண்டிருந்தது. மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia