கும்பகோணம் சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில்கும்பகோணம் சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் கும்பகோணத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் ஒன்றாகும். அமைவிடம்கும்பகோணத்தில் கொத்தன் ஒத்தைத் தெருவிலும், தஞ்சை நாயகிபுரம் என்னுமிடத்திலும் சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் என்ற பெயரில் இரு கோயில்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. [1] ஆனால் இப்பகுதியில் கொத்தன் ஒத்தைத் தெருவிற்கு முன்பாக உள்ள அம்மன் கோயில் தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சை நாயகிபுரம் என்ற பெயரில் தற்போது எப்பகுதியும் அருகில் காணப்படவில்லை. மூலவர்இக்கோயிலின் மூலவராக சுந்தரமூர்த்தி விநாயகர் உள்ளார். கும்பேஸ்வரர் தெற்கு வீதி![]() கும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில் பவானியம்மன் கோயிலுக்கு அருகே சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் என்ற பெயரில் மற்றொரு விநாயகர் கோயில் உள்ளது. மூலவராக விநாயகர் உள்ளார். பவானியம்மன் கோயில் குடமுழுக்கு நாளில் இக்கோயில் குடமுழுக்கு ஆனதாக கல்வெட்டு குறிப்பு கோயிலில் உள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia