கும்பகோணம் நந்தவனத்து மாரியம்மன் கோயில்

நுழைவாயில்

கும்பகோணம் நந்தவனத்து மாரியம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பேட்டை வடக்குத் தெருவில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.

பெயர்க்காரணம்

வயல்வெளி சூழ்ந்திருக்க மாரியம்மன் அமைந்துள்ளதால் இவர் நந்தவனத்து மாரியம்மன் என அழைக்கப்படுகிறார். இந்த அம்மனை வடக்குத்தெரு மாரியம்மன் என்றும் ஆதிநந்தவனத்து மாரியம்மன் என்றும்அழைக்கின்றனர்.

மூலவர்

இக்கோயிலில் உள்ள மூலவர் மாரியம்மன் ஆவார். மூலவர் சிலைக்கு முன்பாக வலப்புறம் விநாயகரும், இடப்புறம் முருகனும் உள்ளனர்.

சன்னதி

சன்னதியில் வலப்புறம் காத்தவராயன், மதுரை வீரன் சிலைகள் உள்ளன. பாப்பாத்தியம்மன், லாட சன்னியாசி, ஓமாந்தூரார் ஆகியோரைக் குறிக்கும் மாடங்கள் காணப்படுகின்றன. இடப்புறம் நவக்கிரகங்கள் உள்ளன. அப்பகுதியில் பதினெட்டாம்படி கருப்பசாமி உள்ளார். சப்தகன்னி, தியாகராஜசுவாமி, கருப்பாயி அம்மனைக் குறிக்கும் வகையில் மாடங்கள் உள்ளன.

விழா

இங்கு ஆண்டுதோறும் பால்குட விழா கொண்டாடப்படுகிறது. [1] ஆடி மாதத்தில் கரக உற்சவம் நடைபெறுகிறது. [2]


மேற்கோள்கள்

  1. கும்பகோணம் ஆதி நந்தவனத்து மாரியம்மன் கோவில் பால் குட ஊர்வலம், மாலை மலர், 8 பிப்ரவரி 2021
  2. ஆதிநந்தவனத்து மாரியம்மன் கோவில் திருவிழா, தினத்தந்தி, 1 ஆகஸ்டு 2023
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya