கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் கோயில்![]()
கம்பட்ட விஸ்வநாதர் கோயில் என்பது தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் (தஞ்சாவூர் மாவட்டம்) அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். தல வரலாறுஇக்கோயில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்குத் தென் மேற்கு திசையில் அமைந்துள்ளது. தஞ்சையையும், பழையாறையையும் தலைநகரங்களாகக் கொண்டு சோழ மன்னர்கள் ஆண்டு வந்த காலத்தில் இங்குப் பொற்காசு அடிக்கும் நிலையங்கள் (கம்பட்டம் = பொன், வெள்ளி நாணயங்கள் அடிக்குமிடம்) இருந்ததாகக் கூறப்படுவதால் கம்பட்ட விசுவநாதசுவாமி எனப் பெயர் பெற்றுள்ளது. 'கொற்றச்சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதியினும் செறிய' என அகநானூறு கூறுகிறது. குடந்தையில் சோழரின் கருவூலம் இருந்ததாம். அதனை நினைவூட்டும் சான்று கம்பட்ட விஸ்வநாதர் கோயில்.[1] பிரளய காலத்தில் அமுத கும்பத்திலிருந்த மாலை இத்தலத்தில் விழுந்ததால் இத்தலம் மாலதிவனம் என்று அழைக்கப்பட்டது. அப்போது உதயகிரியில் நிசாசரா என்ற மாதவர் இருந்தார். அவரது புதல்வரான தூமகேது தமது மாணவர்கள் சூழ்ந்துவர இத்தலத்தை அடைந்தார். மகாமகத் தீர்த்தத்தில் நீராடி ஆதிகும்பேஸ்வரரை வணங்கி, இங்குள்ள வருண தீர்த்தத்தை திருப்பணி செய்து நாள்தோறும் பூஜை செய்து வர இறைவனும் காட்சி கொடுத்தார். அந்த ஆனந்தமயமான காட்சியைக் கண்ட தூமகேது இறைவன் விசுவேசர் என்றும், இறைவி ஆனந்தநிதி என்ற பெயருடனும் விளங்குமாறு வேண்டிக் கொண்டார். அவ்வாறே இறைவனும், இறைவியும் அழைக்கப்படுகின்றனர். இத்தலத்தின் தீர்த்தம் தூமகேது தீர்த்தம் ஆகும்.[2] இறைவன், இறைவிஇத்தலத்தில் உறையும் இறைவன் விசுவேசர், இறைவி ஆனந்தநிதி. குடமுழுக்கு2016 மகாமகத்தை முன்னிட்டு அக்டோபர் 26, 2015இல் இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது.[3] [4] மேற்கோள்கள்
26 அக்டோபர் 2015 குடமுழுக்கு படத்தொகுப்புவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia