கும்பகோணம் மேட்டுத்தெரு விசுவநாதசுவாமி கோயில்

கோயில் முகப்பு

கும்பகோணம் மேட்டுத்தெரு விசுவநாதசுவாமி கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேட்டுத்தெருவில் உள்ள சிவன் கோயிலாகும். [1]

மூலவர்

இக்கோயிலின் மூலவர் லிங்கத்திருமேனியாக உள்ளார். அவர் விசுவநாதசுவாமி என்றழைக்கப்படுகிறார். மூலவர் சன்னதியின் வடப்புறம் விசாலாட்சி அம்மன் சன்னதி உள்ளது.

பிற தெய்வங்கள்

மூலவருக்கு முன்பாக உள்ள முன் மண்டபத்தில் வலது புறம் விநாயகர் உள்ளார். இடது புறம் சுப்பிரமணியர் உள்ளார். இக்கோயிலில் நவக்கிரக சன்னதியும், ஆஞ்சநேயர் சன்னதியும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

விநாயகர் சிறப்பு

இங்குள்ள இவ்விநாயகர் செங்கழுநீர் விநாயகர் என அழைக்கப்படுகிறார். [2]விசுவநாதசுவாமி கோயில் என்பதைவிட செங்கழூநீர் விநாயகர் கோயில் என்றே உள்ளூரில் இக்கோயிலை அழைக்கின்றனர்.

மேற்கோள்கள்

  1. புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை,கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992
  2. அருள்மிகு செங்கழுநீர் விநாயகர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya