தாராசுரம்
2021-இல் புதிய கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைத்தல்![]() ![]() ![]() ![]() தாராசுரம் பேரூராட்சியை அக்டோபர், 2021-இல் புதிதாக நிறுவப்பட்ட கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[4][5] அமைவிடம்தாராசுரம் பேரூராட்சி தஞ்சாவூரிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு2.3 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,931 வீடுகளும் 15,787 மக்கள்தொகையும் கொண்டது.[7][8][9] சப்தஸ்தானம்சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர்.[10] இது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும்.[11] வரலாற்றுச் சிறப்பு![]() இவ்வூர் பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக அறியப்படுகிறது. இக்கோவில் மிகச்சிறப்பான கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய விமானம் 85 அடி உயரம் கொண்டது. பத்தாம் நூற்றாண்டில் இருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோவிலும் தாராசுரம் கோயிலும் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia