கும்பகோணம் யானையடி அய்யனார் கோயில்

ஐயனார் கோயில்
கோயிலின் முகப்பு
ஐயனார் கோயில் is located in தமிழ்நாடு
ஐயனார் கோயில்
ஐயனார் கோயில்
தமிழ் நாடு-இல் அமைவிடம்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:கும்பகோணம்
கோயில் தகவல்
மூலவர்:ஐயனார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

கும்பகோணத்தில் உள்ள ஐயனார் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.[1][2]

இருப்பிடம்

கும்பகோணம் நகரில் நாகேஸ்வரன் கோயில் தெற்கு வீதியில், ஜெகந்நாதப்பிள்ளையார் கோயில் அருகே இக்கோயில் அமைந்துள்ளது. முச்சந்தி பாதாளகாளியம்மன் கோயில், ஜெகந்நாதப்பிள்ளையார் கோயில், படைவெட்டி மாரியம்மன் கோயில், பகவத் விநாயகர் கோயில் ஆகிய கோயில்களும் உள்ளன.

மூலவர்

இக்கோயிலின் கருவறையில் ஐயனார், பூர்ணதேவி மற்றும் புஷ்கலாதேவியுடன் உள்ளார்.[3]

அமைப்பு

முகப்பின் எதிரில் யானை குதிரை

இக்கோயிலுக்கு எதிரே மிடுக்கோடு யானை, குதிரை கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றன. அதனைக் கண்டு உள்ளே சென்றால் முன் மண்டபத்தை அடுத்து உள்ளே கருவறை உள்ளது. மூலவர் சன்னதியின் வலப்புறம் ஐயப்பன் சன்னதியும், இடப்புறம் முருகன் சன்னதியும் உள்ளன. இக்கோயிலின் திருச்சுற்றில் விநாயகர் மற்றும் துர்க்கைக்கு தனி சன்னதிகள் உள்ளன. சப்தகன்னிகை, சண்டிதேவி, முண்டாதேவர், பாவை, நாகர், சந்திரன், மதுரைவீரன், வெள்ளையன், சூரியன், சாயாதேவி ஆகியோரும் திருச்சுற்றில் காணப்படுகின்றனர்.

குடமுழுக்கு

இக்கோயிலில் அக்டோபர் 26, 2015இல் குடமுழுக்கு நடைபெற்றது.[4][5][6]

மேற்கோள்கள்

  1. புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை,கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992
  2. தினமலர் கோயில்கள்
  3. கும்பகோணம் அருள்மிகு யானையடி ஐயனார் திருக்கோயில் திருத்தல வரலாறு, அருள்மிகு யானையடி ஐயனார் திருக்கோயில் நிர்வாகம், கும்பகோணம், 1998
  4. யானையடி ஐயனார் கோயிலில் அக். 26-ல் குடமுழுக்கு விழா, தினமணி, அக்டோபர் 20, 2015
  5. கும்பகோணத்தில் ஏகாம்பரேஸ்வரர், அமிர்தகலசநாதர் கோயில்களில் குடமுழுக்கு விழா, தினமணி, அக்டோபர் 23, 2015
  6. கும்பகோணத்தில் ஏகாம்பரேஸ்வரர், கும்பகோணத்தில் 14 கோயில்களில் குடமுழுக்கு, தினமணி, அக்டோபர் 27, 2015
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya