கைதடி நுணாவில்

கைதடி நுணாவில்
நாடு இலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிசெ பிரிவுதென்மராட்சி

கைதடி நுணாவில் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இந்த ஊரை மட்டுவில் தெற்கு கைதடி நுணாவில் என்று சொல்லும் வழக்கமும் உண்டு. இந்த ஊர் கைதடிக்கும் நுணாவிலுக்கும் நடுவில் இருப்பதால் இதை கைதடி நுணாவில் என்று அழைக்கப்படுகின்றது.

இவ்வூரின் வடக்கு எல்லையில் மட்டுலும், கிழக்கு எல்லையில் நுணாவிலும், தெற்கில் நாவற்குழியும், மேற்கில் கைதடியும் உள்ளன. இந்த ஊரில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வாழ்ந்து வருகின்றனர் மற்றும் ஊரின் பிரதேச செயலாளராக செல்வி தயானந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.[1]

கைதடி நுணாவிலுள்ள பாடசாலைகள்

  • கைதடி நுணாவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை (கைதடி நுணாவில் அ.த.க பாடசாலை)
    • இது 1900 களில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பாடலசையாகும். இந்த பள்ளியில் தரம் 1 முதல் 11 வரையான வகுப்புகள் நடைபெறுகின்றது.
  • குமரகுருபரன் பாலர் பாடசாலை
    • இது ஒரு மழலைகள் பாடசாலையாகும்.

கைதடி நுணாவிலுள்ள கோயில்கள்

  • கண்ணகி அம்மன் கோயில்
  • வீரபத்திரர் கோயில்
  • பைரவர் கோயில்
  • முருகன் கோயில்
  • அண்ணமார் கோயில்

கல்வி

இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் கல்வித்துறையில் முன்னேறியவர்களாக உள்ளார்கள். இவர்களின் மேற் படிப்பை சாவகச்சேரி அல்லது யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு நாளும் பயணம் செய்து தமது கல்வியைப் பெற்று வந்தனர். சிலர் கல்லூரி படிப்பிற்க்காக மட்டக்களப்பு, வவுனியா மற்றும் கொழும்பு போன்ற பல்கலைக்கழகங்களிலும் சென்றுள்ளார்கள்.

தொழில்

ஆரம்பத்தில் கைதடி நுணாவில் வாழ்ந்த மக்கள் விவசாயிகள், தனியார் தொழிலாளி மற்றும் கூலித்தொழிலாளி ஆகும். இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக பலர் தங்களது பிள்ளைகளை வெளிநாடு அனுப்பிவைத்தனர். அதன் தாக்கத்தால் இந்த ஊரில் வாழும் மக்களின் பாதியினர் வெளிநாட்டு உதவியுடன் வாழ்ந்து வருவதால் இவர்களுக்கு தொழில் செய்வது பற்றிய அவசியம் இல்லை. தற்பொழுது இந்த ஊரை சேர்ந்தவர்களில் சிலர் அரச அதிகாரிகள் மற்றும் தனியார் தொழிலாளியாக இருக்கின்றார்கள்.

திருவிழாக்கள்

இங்கு வாழும் மக்கள் சைவர்கள் ஆகும். இவர்களில் பெரும்பாலும் விவசாயிகள் என்பதால் தைப்பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கலை மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

பங்குனி மாதத்தில் பங்குனி திங்கள் என்ற திருவிழாவை ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் 4 வாரத்திற்கு நான்கு ஊரை சேர்ந்த மக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள். முதலாவது திங்கள் நுணாவிலும், இரண்டாவது திங்கள் கைதடி நுணாலும், மூன்றாவது திங்கள் மட்டுலும் மற்றும் நான்காவது திங்கள் கைதடியும் ஆகும். இந்த திருவிழாவில் பூஜா செய்து அன்னதானம் வழங்கி மற்றும் மயிலாட்டம் போன்ற பல சிறப்பு நிகழ்ச்சியுடன் ஒரு நாள் முழுவது கொண்டாடுவார்கள். புரட்டாதி மாதத்தில் வீரபத்திரர் ஆலயத்திலிருந்து கண்ணகி அம்மன் கோயில் வரை மற்றும் கண்ணகி அம்மன் கோயிலிருந்து நல்லூர் கந்தசுவாமி கோவில் வரை காவடியாட்டம் மற்றும் பால் செம்பு போன்றவற்றை எடுத்துக்கொண்டு நடப்பயணத்தில் செல்லும் வழக்கம் இவர்களில் உண்டு.

உணவு முறை

இங்கு வாழும் மக்களில் பெரும்பாலோனோர் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சைவ உணவுகளை மட்டும் உண்பார்கள். சிலர் திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் சைவம் உண்பார்கள். அசைவ உணவாக மீன்வகை, கோழி மற்றும் ஆடு மட்டும் உண்பார்கள். இவர்களின் பெரும்பாலானோர் மாட்டுக் கறி சாப்புடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • காலை நேரத்தில் தேனீர், மாட்டுப் பால், அங்கேர் பால் அல்லது மைலோ போன்ற நீராகாரம் எடுத்துக்கொள்வார்கள். அதனுடன் பிட்டு, இடியப்பம், தோசை அல்லது பாண், பணிஸ், சுண்டல் (அவித்த கடலை) போன்றவற்றை உட்கொள்வார்கள்.
  • மதிய நேரத்தில் புழுங்கல் அரிசி, சிவப்பு குத்து அரிசி போன்றவற்றில் சோறு செய்வார்கள். சைவ நாட்களில் மரக்கறி செய்வர்கள். இவர்களின் உணவில் பருப்பு கட்டாயமாக இருக்கும். அசைவ நாட்களில் மீன் கறியுடன் சோதி என்ற ஒரு ரசம் செய்வார்கள். வாரநாட்களில் பெரும்பாலும் மீன், கோழி அல்லது ஆடு சமைப்பார்கள்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "கிராம சேவகர் பிரிவு". www.thenmaradchchi.ds.gov.lk. Archived from the original on 2020-02-14. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya