கோழிமேக்கனூர்
கோழிமேக்கனூர் (Kozhimekkanur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643532.[1] இது வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது. அமைவிடம்இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 310 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம்11°55'11.2"N 78°21'44.6"E[3] ஆகும். இங்கு இந்தியன் வங்கி மற்றும் ஸ்டான்லி மெட்ரிக் மேனிலைப்பள்ளி போன்றவை உள்ளன. மக்கள் வகைபாடு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 1246 குடும்பங்களும், 4775 மக்களும் வாழ்கின்றனா். இதில் ஆண்கள் 2401, பெண்கள் 2374 ஆவா்.[4] மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia