சமுனாமரத்தூர் வட்டம்
சமுனாமரத்தூர் வட்டம், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வருவாய் வட்டங்களில் ஒன்றாகவும் மற்றும் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள 4 வட்டங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.[1] போளூர் வட்டத்தின் மேற்கு பகுதிகளையும்; செங்கம் வட்டத்தின் வடக்குப் பகுதிகளையும் கொண்டு, இவ்வட்டம் புதிதாக நிறுவப்பட்டது. இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் சமுனாமரத்தூரில் இயங்குகிறது. இவ்வட்டத்தின் கீழ் 42 வருவாய் கிராமங்கள் உள்ளது. சவ்வாது மலைப் பகுதியில் அமைந்த சமுனாமரத்தூர் வட்டத்தில் சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இவ்வட்டத்தில் 2 உள்வட்டங்கள் உள்ளன. அமைவிடம்சவ்வாதுமலை வட்டத்திற்கு தெற்கில் செங்கம் வட்டமும்; வடகிழக்கில் போளூர் வட்டமும்; தென்கிழக்கில் கலசப்பாக்கம் வட்டமும்; மேற்கிலும், வடக்கிலும் வேலூர் மாவட்டமும் எல்லைகளாகக் கொண்டது. மாவட்டத் தலைமையிடம் திருவண்ணாமலைக்கு வடமேற்கே 80 கி.மீ. தொலைவிலும், ஆரணியிலிருந்து 69 கி.மீ. தொலைவிலும், வேலூரிலிருது 87 கி.மீ. தொலைவிலும்; சென்னையிலிருந்து 222 கி.மீ. தொலைவிலும் சவ்வாது மலை உள்ளது.[2] வருவாய் கிராமங்கள்சவ்வாது மலை வருவாய் வட்டம் 42 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. மக்கள்தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 47,271 ஆகும். அதில் 24636 ஆண்களும், 22,635 பெண்களும் உள்ளனர் 8500 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 90.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். [2] மேற்கோள்கள்வெளி இணைப்புக்ள் |
Portal di Ensiklopedia Dunia