வெம்பாக்கம் வட்டம்

வெம்பாக்கம் வட்டம், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] செய்யார் வட்டத்தின் வடக்குப் பகுதிகளைக் கொண்டு வெம்பாக்கம் வட்டம், மே 2012ல் நிறுவப்பட்டது.[2] வெம்பாக்கம் வட்டம் 91 வருவாய் கிராமங்கள் கொண்டது.[3] இவ்வட்டத்தில் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

அமைவிடம்

வெம்பாக்கம் வட்டத்தின் வடக்கிலும், மேற்கிலும் இராணிப்பேட்டை மாவட்டமும், கிழக்கில் காஞ்சிபுரம் மாவட்டம், தெற்கில் செய்யார் வட்டமும் எல்லைகளாக உள்ளது.

மாவட்டத் தலைமையிடம் திருவண்ணாமலைக்கு வடகிழக்கே, தேசிய நெடுஞ்சாலை எண் 38 வழியாக 116 கி.மீ. தொலைவிலும்; காஞ்சிபுரத்திலிருந்து 16.6 கி.மீ. தொலைவிலும்; சென்னையிலிருந்து 96 கி.மீ. தொலைவிலும் வெம்பாக்கம் உள்ளது.[4]

குறுவட்டங்கள்

வெம்பாக்கத்தை தலைமையிடமாக கொண்டு நான்கு குறுவட்டங்கள் செயல்படுகிறது. வெம்பாக்கம், தூசி, நாட்டேரி, பெருங்கட்டூர்.[2]

வருவாய் கிராமங்கள்

வெம்பாக்கம் வருவாய் வட்டம் 91 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 1,24,188 ஆகும். அதில் 61,094 ஆண்களும், 63,094 பெண்களும் உள்ளனர் 43566 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 85.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். [3]

மேற்கோள்கள்

  1. திருவண்ணாமலை மாவட்டத்தின் வட்டங்கள்
  2. Kilpennathur to become 11th taluk of Tiruvannamalai district
  3. வெம்பாக்கம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
  4. [1]

வெளி இணைப்புக்ள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya