சிம்பாங் ரெங்கம்
சிம்பாங் ரெங்கம் (மலாய்: Simpang Renggam; ஆங்கிலம்: Simpang Renggam; சீனம்: 新邦令金) என்பது மலேசியா, ஜொகூர், குளுவாங் மாவட்டத்தில் அமைந்து உள்ள நகரம். இந்த நகரம் குளுவாங் நகரத்திற்கு தெற்கே அமைந்து உள்ளது.[1][2] மலேசிய கூட்டரசு சாலை 1 வழியாக ஜொகூர் பாருவிலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ளது. பொதுரெங்கம் நகரத்தின் வரலாறு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1950-களில் இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் விக்டோரியா மகாராணி ஆகியோரின் வருகைகளைப் பெற்றுள்ளது.[1] அந்தக் காலக்கட்டத்தில் இந்த இடம் ஒரு முக்கிய குடியேற்றப் பகுதியாக இருந்தது. கத்ரி ரப்பர் தோட்டம், உலு ரெமிஸ் ரப்பர் தோட்டம் போன்ற பெரிய ரப்பர் தோட்டங்கள் இங்கு இருந்தன. இன்றும் உள்ளன. அத்துடன் பிரித்தானியக் காலனித்துவத்தின் மையமாகவும் இருந்தது; இன்றும் அந்த இரப்பர் தோட்டங்கள் உள்ளன.[1] குழிப்பந்தாட்ட மைதானங்கள், வானூர்தி நிலையங்கள் மற்றும் பழைய கட்டிடங்கள் இன்றுவரை நிலைக்கும் வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஆகும். மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia