குளுவாங் மாவட்டம்
குளுவாங் மாவட்டம் (மலாய்: Daerah Batu Pahat; ஆங்கிலம்: Batu Pahat District; சீனம்: 峇株巴辖); ஜாவி: كلواڠ) மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். குளுவாங் நகரம் குளுவாங் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். ஜொகூர் மாநிலத்தில் நிலத்தால் சூழப்பட்ட மூன்று மாவட்டங்களில் குளுவாங் மாவட்டம் ஒன்றாகும். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் சிகாமட் மாவட்டம்; மேற்கில் பத்து பகாட் மாவட்டம்; கிழக்கில் மெர்சிங் மாவட்டம்; தெற்கில் பொந்தியான் மாவட்டம்; கூலாய் மாவட்டம்; கோத்தா திங்கி மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் அமைந்து உள்ளன. இந்த மாவட்டத்தின் தலைநகரம் குளுவாங். நிர்வாகப் பிரிவுகள்குளுவாங் மாவட்டம் 8 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. குளுவாங் நகராட்சி மன்றம்குளுவாங் நகராட்சி மன்றத்தில் உள்ள இடங்கள்: சிம்பாங் ரெங்கம் நகராட்சி மன்றம்
நகரங்கள்
குளுவாங் மாவட்டத்தின் தமிழ்ப்பள்ளிகள்மலேசியா; ஜொகூர்; குளுவாங் மாவட்டத்தில் (Kluang District) 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,261 மாணவர்கள் பயில்கிறார்கள். 191 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[2]
சான்றுகள்
மேலும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia