சிகாமட் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 144 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 155 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் சிகாமட் மாவட்டமும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தில் நிறைய ரப்பர், செம்பனைத் தோட்டங்கள் இருந்தன. தமிழர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்களினால் அந்தத் தோட்டங்கள் குறைந்து விட்டன.
நிர்வாகப் பகுதிகள்
சிகாமட் மாவட்டம் 11 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப் படுகிறது.
ஜொகூர்; சிகாமட் மாவட்டத்தில் (Segamat District) 12 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 841 மாணவர்கள் பயில்கிறார்கள். 154 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]