ரெங்கம்
ரெங்கம் (மலாய்: Renggam அல்லது Rengam; ஆங்கிலம்: Renggam; சீனம்: 令金) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் குளுவாங் மாவட்டத்தில் அமைந்து உள்ள நகரம். இந்த நகரம் ஜொகூர் மாநிலத்தின் மத்தியில், குளுவாங் நகரத்திற்கு தெற்கே அமைந்துள்ளது.[1] ஜொகூர் பாருவிலிருந்து வடக்கே 82 கி.மீ.; பத்து பகாட் நகரத்திற்கு தென்கிழக்கே 80 கி.மீ.; மெர்சிங் நகரத்திற்கு மேற்கே 83 கி.மீ.; மற்றும் சிகாமட் நகரத்திற்கு தெற்கே அமைந்துள்ளது. ஜொகூர் மாநிலத்தில் உள்ள தொழில்துறை மையங்களில் ரெங்கம் நகரமும் ஒன்றாகும். ரெங்கம் நகருக்கு அருகில் உள்ள மற்ற நகரங்கள் லாயாங் லாயாங் மற்றும் சிம்பாங் ரெங்கம். பொதுரெங்கம் நகரத்தின் வரலாறு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1950-களில் இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் விக்டோரியா மகாராணி ஆகியோரின் வருகைகளைப் பெற்றுள்ளது.[2] அந்தக் காலக்கட்டத்தில் இந்த இடம் ஒரு முக்கிய குடியேற்றப் பகுதியாக இருந்தது. கத்ரி ரப்பர் தோட்டம், உலு ரெமிஸ் ரப்பர் தோட்டம் போன்ற பெரிய ரப்பர் தோட்டங்கள் இங்கு இருந்தன. இன்றும் உள்ளன. அத்துடன் பிரித்தானியக் காலனித்துவத்தின் மையமாகவும் இருந்தது; இன்றும் அந்த இரப்பர் தோட்டங்கள் உள்ளன.[2] குழிப்பந்தாட்ட மைதானங்கள், வானூர்தி நிலையங்கள் மற்றும் பழைய கட்டிடங்கள் இன்றுவரை நிலைக்கும் வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஆகும். இந்த நகரத்தில் ரெங்கம் தொடருந்து நிலையம் எனும் பெயரில் ஒரு தொடருந்து நிலையம் உள்ளது. இந்த நிலையம் 1909-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. ரெங்கம் தமிழ்ப்பள்ளிகள்ரெங்கம் நகர்ப்புறத்தில் 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 131 மாணவர்கள் பயில்கிறார்கள். 32 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[3]
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia