ஜொகூர் பாரு நகரம்
சொகூர் பாரு (மலாய்: Johor Bahru அல்லது Bandaraya Johor Bahru; (சுருக்கம்: JB); ஆங்கிலம்: Johor Bahru அல்லது City of Johor Bahru; சீனம்:新山; சாவி: جوهر بهارو) என்பது மலேசியா, சொகூர் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். சொகூர் பாரு மாவட்டத்தில் அமைந்து உள்ளது. தீபகற்ப மலேசியாவின் தெற்கு முனையில் சொகூர் நீரிணைப் பகுதியில், அமைந்துள்ள இந்த மாநகரத்தின் பரப்பளவு 220 கி.மீ.; 2020-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி மக்கள் தொகை 3,805,322. சொகூர் என்பது 'சவுகர்' எனும் அரபுச் சொல்லில் இருந்து வந்தது. 'விலைமதிப்பற்ற கற்கள்' என்பதற்கான அரபு மொழியாகும். மலாய் மொழியில் சொகூர் (Johor) என்றால் அணிகலன். பாரு (Bahru) என்றால் புதியது. சொகூர் பாரு எனும் இரு கூட்டுச் சொற்களின் பொருள் புதிய அணிகலன் என்பதாகும்.[1] சொகூர் பாரு மாநகரத்தில் மட்டும் 1,711,191 பேர் வசிக்கின்றனர். இந்த மாநகரம் இசுகந்தர் புத்திரி நகரை ஒட்டியுள்ளது. சொகூர் பாரு; இசுகந்தர் புத்திரி; இரு நகரங்களையும் ஒருங்கிணைத்து இசுகந்தர் மலேசியா என்று அழைக்கிறார்கள். இரு நகரங்களின் கூட்டு மக்கள் தொகை 2,500,000. இது மலேசியாவின் இரண்டாவது பெரிய நகர்ப்புறமாகும்.[2] பொதுசொகூர் பாரு மாநகரம், சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளின் நில எல்லை இணைப்புகளில் ஒன்றாகச் செயல்படுகிறது. இரு நாடுகளையும் இரு பாலங்கள் இணைக்கின்றன. முதலாவது மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம்; இரண்டாவது மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலம். மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம் (Johor–Singapore Causeway), சொகூர் பாரு மாநகரத்தையும் சிங்கப்பூர் உட்லேண்சு பகுதியையும் இணைக்கும் தரைப்பாலம் ஆகும். சிங்கப்பூர் தரைப்பாலம்இந்தத் தரைப் பாலம், 1.056 கி.மீ. (0.66 மைல்) நீளம் கொண்டது. ஒருங்கிணைந்த தொடர்வண்டி; வாகனங்களின் பாதைப் பாலமாகவும் திகழ்கின்றது. இதைச் சுருக்கமாக ‘சிங்கப்பூர் காசுவே’ என பொதுமக்கள் அழைப்பது வழக்கம். உலகில் பரபரப்பாகப் பயன்படுத்தப்படும் எல்லைக் கடப்பு பாலங்களில் இந்த மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலமும் ஒன்றாகும், தினசரி 350,000 பயணிகள் இந்தப் பாலத்தைப் பயன்படுத்துகிறார்கள்.[3] மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலம்மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலம் (Malaysia–Singapore Second Link) சொகூர் மாநிலத்தையும் சிங்கப்பூர் தீவையும் இணைக்கும் இரண்டாவது பாலம். 1998 சனவரி 2-ஆம் தேதி திறக்கப்பட்டது. மலேசியாவில் இந்தப் பாலத்தை, பொதுவாக துவாசு பாலம் அல்லது துவாசு இரண்டாவது பாலம் என்று அழைப்பதும் உண்டு.[4] சிங்கப்பூரில், துவாசு இரண்டாவது இணைப்பு (Tuas Second Link) என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப் படுகிறது. வரலாறு![]() 1855-ஆம் ஆண்டில், தெமாங்கோங் டாயாங் இபுராகிம் (Temengong Daeng Ibrahim) எனும் சொகூர் தெமாங்கோங்; சொகூர் சிம்மாசனத்தின் மீதான உரிமையைப் பெற்றார். அவர்தான் தஞ்சோங் புத்திரி (Tanjung Puteri) எனும் பெயரில் சொகூர் பாரு நகரத்தை நிறுவினார்.[5] தெமாங்கோங் அல்லது தெமெங்குங் என்பது பாரம்பரிய மலாய் இராச்சியங்களில் ஒரு பிரபு பதவியை (Title of Nobility) குறிக்கும் சொல் ஆகும். ஒரு தெமாங்கோங் பதவி ஒரு சுல்தானால் நியமிக்கப்படும் பதவி. ஓர் இராச்சியத்தின் அதன் எல்லைப் பகுதிகளில் உள்ள பிரதேசங்களின் ஆட்சியாளராக ஒரு தெமாங்கோங் நியமிக்கப்படலாம். அந்தப் பிரதேசங்களில் அவர் ஒரு துணை ஆளுநராகச் செயல்படுவார்.[6] மகா ராசா அபு பாக்கார்அந்தக் கட்டத்தில், சிங்கப்பூர், தெலுக் பிலாங்காவில் (Telok Blangah) இருந்த சொகூர் இராச்சியத்தின் தலைநகர் தஞ்சோங் புத்திரி (Tanjung Puteri) எனும் இடத்திற்கு மாற்றப்பட்டது. அந்தப் புதிய இடத்திற்கு, அண்மைய காலத்தில் இசுகந்தர் புத்திரி (Iskandar Puteri) எனப் பெயர் வைக்கப்பட்டது. 1868-ஆம் ஆண்டு தெமாங்கோங் டாயாங் இபுராகிம் அவர்களின் மகன் மகா ராசா அபு பாக்கார் (Maharaja Abu Bakar) புதிய ஜொகூர் மகாராசாவாக முடிசூட்டிக் கொண்டார். தன்னுடைய வம்சத்தை பழைய சொகூர் சுல்தானகத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, தஞ்சோங் புத்திரி என்பதை சொகூர் பாரு (Johor Bahru) என மறுபெயரிட்டார். ![]() 16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சொகூர் சுல்தானகம் உருவாக்கம் பெற்றது. அந்தச் சுல்தானகத்தை உருவாகியவர் அலாவுதீன் ரியாட் சா II. இவர் மலாக்கா சுல்தான்களில் ஆகக் கடைசியாக மலாக்காவை ஆட்சி செய்த சுல்தான் மகமுட் சா என்பவரின் புதல்வர் ஆவார். மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றியதும் அவர்களிடம் இருந்து தப்பிக்க சுல்தான் முகமட் சா அங்கிருந்து சொகூருக்கு இடம் பெயர்ந்தார். மலாக்கா பேரரசுவிற்குப் பின்னர் உருவாக்கம் பெற்ற இரு வாரிசு அரசுகளில் சொகூர் சுல்தானகம் ஒன்றாகும். மற்றொரு வாரிசு பேராக் சுல்தானகம் ஆகும். முசபர் சாபேராக் சுல்தானகத்தைச் சுல்தான் முகமட் சாவின் மற்றொரு புதல்வரான முசபர் சா உருவாக்கினார். அலாவுதீன் ரியாட் சா உருவாக்கிய சொகூர் சுல்தானகம், போர்த்துகீசியர்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. சொகூர் சுல்தானகம் அதன் ஆட்சியின் உச்சத்தில் இருந்த போது பகாங், இந்தோனேசியாவின் ரியாவு தீவுகள், சுமத்திராவின் ஒரு பகுதி போன்ற இடங்கள் அதன் ஆளுமையின் கீழ் இருந்தன.[7] வட சுமத்திராவை ஆட்சி செய்த அச்சே அரசு, மலாக்காவை ஆட்சி செய்த போர்த்துகீசிய அரசு போன்ற அப்போதைய அரசுகளுடன் நீண்ட கால சண்டை சச்சரவுகளில் சொகூர் அரசு ஈடுபட வேண்டிய நிலைமையும் இருந்து வந்தது. இந்தக் காலக் கட்டங்களில் நட்பு மலாய் மாநிலங்களும், டச்சுக்காரர்களும் சொகூர் சுல்தானகத்துடன் தோழமை பாராட்டி வந்தனர். போர்த்துகீசியர்களுக்கு அச்சுறுத்தல்![]() அலாவுதீன் ரியாட் சா உருவாக்கிய சொகூர் சுல்தானகம், போர்த்துகீசியர்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. சொகூர் சுல்தானகம் தனது ஆட்சியின் உச்சத்தில் இருந்த போது பகாங்; இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகள், சுமத்திராவின் ஒரு பகுதி போன்றவை அதன் ஆளுமையின் கீழ் இருந்தன.[8] 1641-ஆம் ஆண்டு சொகூர் அரசின் உதவியுடன் டச்சுக்காரர்கள் மலாக்காவைக் கைப்பற்றினர். அதன் பின்னர் சொகூர் அரசு மலர்ச்சி பெற்ற வணிகத் தளமாகப் புகழ் பெற்றது. இருப்பினும் 17-ஆம்; 18-ஆம் நூற்றாண்டுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட உள்நாட்டு விரிசல்களினால் சொகூர் அரசின் மேலாண்மை மங்கிப் போனது.[9] டத்தோ தெமாங்கோங் டத்தோ இபுராகிம்18ஆம் நூற்றாண்டில், சுலாவாசியைச் சேர்ந்த பூகிசுகாரர்களும், சுமத்திராவைச் சேர்ந்த மினாங்காபாவ் ஆட்சியாளர்களும் சொகூர்-ரியாவ் பேரரசின் அரசியல் ஆற்றல்களைக் கட்டுப்படுத்தி வந்தனர்.[10][11] 1855-இல் சிங்கப்பூரை ஆட்சி செய்த பிரித்தானியர்களுக்கும் சொகூர் மாநிலத்தின் சுல்தான் அலிக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி சொகூர் அரசு, டத்தோ தெமாங்கோங் டத்தோ இபுராகிமிடம் ஒப்படைக்கப் பட்டது. டத்தோ தெமாங்கோங் டத்தோ இபுராகிம், சொகூர் மாநிலத்தின் தென்பகுதியில் தஞ்சோங் புத்திரி எனும் ஒரு புதிய நகரத்தை உருவாக்கினார். இந்த நகரம் தான் இப்போதைய சொகூர் பாரு ஆகும். தெமாங்கோங் டத்தோ இபுராகிமிற்குப் பின்னர் அவருடைய புதல்வர் டத்தோ தேமாங்கோங் அபு பாக்கார் சொகூர் சுல்தானகத்தின் அரியணையில் அமர்ந்தார்.[12][13][14] நவீன சொகூரின் தந்தைஇங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியார் அவருக்கு சிரீ மகாராசா சொகூர் எனும் சிறப்புப் பெயரை வழங்கினார். சுல்தான் அபு பாக்கார் சொகூர் மாநிலத்திற்கு ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொடுத்தார்.[15] பிரித்தானிய பாணியிலான ஓர் அரசியல் நிர்வாகத்தை (Undang-undang Tubuh Negeri Johor) ஏற்படுத்தினார். எதிர்கால சுல்தான்களுக்காக ஓர் அதிகாரத்துவ அரண்மனையையும் (Istana Besar) கட்டினார். அதே வேளையில் ஓர் அழகிய பள்ளிவாசலையும் (Sultan Abu Bakar State Mosque) கட்டினார்.[16] காலனித்துவ ஆட்சி![]() சொகூர் சுல்தானகத்திற்கு பிரித்தானியர்கள் நீண்ட காலமாக ஆலோசகர்களாக இருந்த போதிலும், சொகூர் சுல்தானகம் ஒருபோதும் ஆங்கிலேயர்களின் நேரடி காலனித்துவ ஆட்சியின் கீழ் வரவில்லை. 1896-ஆம் ஆண்டில் மலாயாவில் மலாய் நாடுகளின் கூட்டமைப்பு (Federated Malay States - FMS) உருவானது. அந்தக் கூட்டமைப்பு உருவான பின்னர், 1914-ஆம் ஆண்டில் சொகூர் சுல்தான் இபுராகிம் (Sultan Sir Ibrahim Al-Masyhur) ஆட்சிக் காலத்தில், ஒரு பிரித்தானிய ஆலோசகரை (Resident) சொகூர் சுல்தானகம் ஏற்றுக் கொண்டது. அதன் பின்னர்தான் சொகூர் சுல்தானகம், நேரடியான காலனித்துவ ஆட்சி நடைமுறையின் கீழ் வந்தது.[17] சொகூர் மாநிலச் செயலகக் கட்டடம்சொகூர் பாருவில், தீபகற்ப மலாயா தொடருந்து விரிவாக்கம் (Federated Malay States Railways) 1909-ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.[18] 1923-ஆம் ஆண்டில் மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம் (Johor–Singapore Causeway) கட்டி முடிக்கப்பட்டது.[19] முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு இடையே சொகூர் பாரு மிதமான விகிதத்தில் வளர்ந்தது. பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கம் சொகூர் மாநிலத்தின் நிர்வாகத்தைச் சீரமைக்கத் தொடங்கிய பின்னர் சொகூர் மாநிலச் செயலகக் கட்டடம் (சுல்தான் இபுராகிம் கட்டடம்) (Sultan Ibrahim Building), 1940-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.[20] இரண்டாம் உலகப் போர்![]() 1942 சனவரி 31-ஆம் தேதி, சப்பானியத் தளபதி தோமோயுகி யமாசிதா (General Tomoyuki Yamashita) என்பவரின் தலைமையின் கீழ் சப்பானியர்கள் சொகூர் பாரு நகரத்தை ஆக்கிரமித்தனர். இந்தக் கட்டத்தில் சொகூர் பாருவின் தொடர்ச்சியான வளர்ச்சியும் தடைப்பட்டது. அதற்கு முன்னர் 1942 சனவரி 15-ஆம் தேதியில், வடமேற்கு சொகூரின் முக்கிய நகரங்களான பத்து பகாட் (Batu Pahat); யோங் பெங் (Yong Peng); குளுவாங் (Kluang); ஆயர் ஈத்தாம் (Ayer Hitam) ஆகிய நகரங்களை சப்பானியர்கள் கைப்பற்றி விட்டனர்.[21] தொடர் குண்டுவெடிப்புகள்அதன் விளைவாக, பிரித்தானிய படைகளும் மற்றும் பிற நேச நாட்டுப் படைகளும் (Allies of World War II) சொகூர் பாருவை நோக்கிப் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், 1942 சனவரி 29-ஆம் தேதி சப்பானியர்கள் மேலும் தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்தனர். சப்பானியர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் இறுதி முயற்சியாக, பிரித்தானிய படைகளும் மற்றும் பிற நேச நாட்டுப் படைகளும் சிங்கப்பூருக்குப் பின்வாங்கினர். மறுநாள் 1942 சனவரி 30-ஆம் தேதி மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம் தகர்க்கப்பட்டது.[21] புக்கிட் செரீன் அரண்மனைசேதம் அடைந்த மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலத்தை மீண்டும் இணைத்து சிங்கப்பூரைக் கைப்பற்றுவதற்கு சப்பானியர்கள் திட்டம் வகுத்தனர். அந்தக் கட்டத்தில், சொகூர் சுல்தானின் வசிப்பிடமான புக்கிட் செரீன் அரண்மனையை (Bukit Serene Palace) அவர்களின் தற்காலிகத் தளமாகவும் பயன்படுத்திக் கொண்டனர்.[22] ஒரு மாதத்திற்குள், சப்பானியர்கள் மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலத்தை சரிசெய்தனர். அதன் பின்னர் சில நாட்களில் சிங்கப்பூர் தீவை எளிதாகக் கைப்பற்றினர்.[23] மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia