இந்த மாவட்டம் கெடா, பினாங்கு மாநிலங்களின் எல்லைக்கு அருகாமையில் உள்ளது. தீக்காம் பத்து, பாடாங் தெம்புசு, சுங்கை லாலாங், பீடோங், புக்கிட் செலாம்பாவ், சீடாம், குரூண், செமெலிங், மெர்போக், கோத்தா கோலா மூடா, தஞ்சோங் டாவாய் ஆகியவை கோலா மூடா மாவட்டத்தில் உள்ள இதர நகரங்கள் ஆகும்.
பொது
மலேசியாவில் புகழ்பெற்ற ஜெராய் மலை இந்த மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. மூடா ஆறு இந்த மாவட்டத்தையும் பினாங்கு மாநிலத்தையும் பிரிக்கிறது. பினாங்கு பாலம் இந்த மாவட்டத்தின் தீக்காம் பத்துவையும் பினாங்கு மாநிலத்தின் பும்போங் லீமா எனும் இடத்தையும் இணைக்கின்றது.
கோலா மூடா மாவட்டம் கெடா மாநிலத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாவட்டம் ஆகும். மலேசியாவில் புரதான நாகரீகங்கள் தோன்றிய இடமாகவும் இந்த இடம் கருதப் படுகிறது.[2]
கெடா மாநிலத்தின் தென்பகுதியை சுங்கை மூடா (Sungai Muda) ஆறு இரண்டாகப் பிரித்துச் செல்கிறது. இந்தச் சுங்கை மூடா ஆற்றின் பெயரில் இருந்து தான் கோலா மூடா எனும் பெயர் வந்து இருக்கலாம் என்று புவியியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[3] இந்தச் சுங்கை மூடா ஆறு மலாக்கா நீரிணையில் கலக்கும் இடத்தில் கம்போங் சுங்கை மூடா, கோத்தா கோலா மூடா எனும் மீன்பிடி கிராமங்கள் உள்ளன.
மூடா ஆறு, மெர்போக் ஆறு(Sungai Merbok), சுங்கை மாஸ் (Sungai Mas) போன்ற ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் தான் மலாயாவின் பண்டைய கால நாகரீகங்கள் தோன்றி இருக்கலாம் எனும் கருத்து நிலவி வருகிறது
கோலா மூடா மாவட்ட தமிழ்ப்பள்ளிகள்
மலேசியா; கெடா; கோலா மூடா மாவட்டத்தில் (Kuala Muda District) மொத்தம் 24 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 3,664 மாணவர்கள் பயில்கிறார்கள். 422 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த வட்டாரத்தின் தாமான் கெளாடி தமிழ்ப்பள்ளி 2020 மார்ச் 1-ஆம் தேதி திறக்கப்பட்டது.[4]