ஜுன்னர்
ஜுன்னர் ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த நகரங்களில் ஒன்று. இந்திய மாநிலமான மகாராட்டிரத்தின், புனே மாவட்டத்தின் வடமேற்கில் அமைந்த ஜுன்னர் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். மேலும் இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது மும்பையிலிருந்து 100 கி.மீ கிழக்கிலும், புனேவிற்கு வடக்கில் 94 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஜுன்னர் அருகே சிவனேரி கோட்டை மற்றும் மன்மோடி குகைகள், துளஜா குகைகள், லென்யாத்திரி குகைகள், நானாகாட் போன்ற பௌத்த குடைவரைக் கோயில்களும் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 17 வார்டுகள் கொண்ட ஜூன்னார் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 25,315 ஆகும். அதில் ஆண்கள் 13,066, பெண்கள் 12,249 ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.40% ஆகவுள்ளது. மக்கள் தொகையில் இந்துக்கள் 60.91%, இசுலாமியர் 32.62% மற்றவர்கள் 3.60% ஆகவுள்ளனர்.[1] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia