டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், 2017டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் (சுருக்கமாக ஆர். கே. நகர் இடைத்தேர்தல், 2017) 2017 திசம்பர் 21 ஆம் நாள் தமிழ்நாடு, டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்காக நடந்தது.[1] பின்னணிஇத்தொகுதியின் உறுப்பினரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா 2016 திசம்பர் 5 அன்று காலமானதையடுத்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் 2017 ஏப்ரல் 12 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.[2] ஆனாலும், வாக்காளர்களுக்கு பணம், மற்றும் பொருட்கள் கொடுக்கப்பட்டதாக வந்த முறைப்பாடுகளை அடுத்து மறு தேதி குறிப்பிடாமல் ஏப்ரல் 9 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் இடைநிறுத்துவதாக அறிவித்தது.[3] முக்கியத்துவம்
இடைநிறுத்தப்பட்ட ஏப்ரல் 2017 இடைத்தேர்தல்தேர்தல் அட்டவணைதேர்தலின் முக்கிய நாட்கள் காலக்கோடு[2]
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல்
முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள்
திசம்பர் 2017 இடைத்தேர்தல்ஆர். கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஏப்ரல் 2017 இல் நடக்கவிருந்த இடைத்தேர்தல் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட புகார்களைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, டிசம்பர் 21 ஆம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் எடுத்தது.[8] இந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், பாரதிய ஜனதா சார்பில் கரு.நாகராஜன் மற்றும் சுயேட்சையாக டி. டி. வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட 59 பேர் போட்டியிட்டனர்.[9] டி. டி. வி. தினகரன் வெற்றிஇத்தேர்தலில் 77.5 விழுக்காடு வாக்காளர்கள் தங்கள் வாக்கினைப் பதிவு செய்தனர். டிசம்பர் 24 ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 19 சுற்றுகளாக நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், சுயேச்சை வேட்பாளர் டி. டி. வி. தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,581 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றார்.[10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia