தமிழக இடைத்தேர்தல்கள், 1999–2000 (1999–2000 Tamil Nadu Legislative Assembly by-elections) என்பது இந்தியாவில்தமிழ்நாட்டில்நத்தம் மற்றும் திருவட்டாறு தொகுதிகளுக்கு முறையே 1999 செப்டம்பர் 5 மற்றும் 11 தேதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களையும் நெல்லிக்குப்பம், திருச்சிராப்பள்ளி - II மற்றும் அறந்தாங்கி ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 17, 2000 நடைபெற்ற இடைத்தேர்தல்களையும் குறிப்பதாகும்.
முதல் கட்டத்தில் அதிமுகவிடம் தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு இடத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் (மார்க்சிஸ்ட்)திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு இடத்தையும் இழந்தது. இரண்டாம் கட்டமாக, நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய மதிமுக, அதிமுகவிடம் இருந்து ஒரு இடத்தையும், திமுக தனது இடத்தையும் தக்கவைத்துக்கொண்டன.
அட்டவணையில் இடதுபுறத்தில் உள்ள எண் இடைத்தேர்தலுக்குப் பிறகு மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும், அடைப்புக்குறிக்குள் உள்ள எண்ணிக்கை இடைத்தேர்தலால் கைப்பற்றப்பட்ட அல்லது இழந்த இடங்களையும் குறிக்கிறது.
1996ஆம் ஆண்டிற்கான எண்கள், த.மா.கா.வும் இடதுசாரிகளும் திமுகவுடன் கூட்டணி அமைத்த போது இருந்த கூட்டணியைப் பிரதிபலிக்கிறது.