சமாரியம்(II) குளோரைடு
சமாரியம்(II) குளோரைடு (Samarium(II) chloride) என்பது SmCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியமும் குளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. கீட்டோன்-நடுநிலை வகிக்கிகும் உள்ளிழுத்தல் வினையில் உருபு உற்பத்தி செய்யும் முகவராக சமாரியம்(II) குளோரைடு பயன்படுத்தப்படுகிறது. தயாரிப்புசமாரியம்(III) குளோரைடை சமாரியம் உலோகத்துடன் சேர்த்து வெற்றிடத்தில் 800 முதல் 900 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஒடுக்க வினைக்கு உட்படுத்துவது அல்லது ஐதரசன் வாயுவுடன் 350 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைப்படுத்துவது போன்ற முறைகளில் சமாரியம்(II) குளோரைடு தயாரிக்கப்படுகிறது. :[1]
சமாரியம்(III) குளோரைடை இலித்தியம் உலோகம் அல்லது நாப்தலீனில் உள்ள டெட்ரா ஐதரோ பியூரான் உடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தியும் சமாரியம்(II) குளோரைடை தயாரிக்க முடியும். :[3]
சோடியம் உலோகத்துடனும் இதைப் போன்றதொரு வினையே நிகழ்கிறது. [2] கட்டமைப்புசமாரியம்(II) குளோரைடு PbCl2 (காட்டுணைட்டு) கட்டமைப்பை ஏற்றுக் கொள்கிறது. [2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia