நியோடிமியம்(II) குளோரைடு
நியோடிமியம்(II) குளோரைடு (Neodymium(II) chloride) என்பது NdCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நியோடிமியமும் குளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நியோடிமியம் டைகுளோரைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. தயாரிப்புநியோடிமியம்(III) குளோரைடுடன் இலித்தியம் உலோகம்/நாப்தலீன் அல்லது டெட்ரா ஐதரோபியூரானில் கரைக்கப்பட்ட இலித்தியம் குளோரைடைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி நியோடிமியம்(II) குளோரைடு தயாரிக்கப்படுகிறது. நியோடிமியம்(III) குளோரைடுடன் 650 பாகை செல்சியசு வெப்பநிலையில் நியோடிமியம் உலோகத்தைச் சேர்த்தும் ஒடுக்க வினைக்குப் பின் நியோடிமியம்(II) குளோரைடு தயாரிக்கலாம்.:[2]
கட்டமைப்புPbCl2 சேர்மத்தின் காட்டுனைட்டு கட்டமைப்பை நியோடிமியம்(II) குளோரைடு ஏற்றுக் கொண்டுள்ளது. ஒவ்வொரு Nd2+ அயனியும் குளோரின் எதிர்மின் அயனிகளால் மூவுச்சி முக்கோணப் பட்டக ஒழுங்கமைப்பில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஏழு Nd-Cl பிணைப்பு இடைவெளிகள் 2.95-3.14 Å என்ற அளவிலும் இரண்டு பிணைப்புகள் 3.45 Å. நீளமும் கொண்டவையாக பிணைந்துள்ளன.[3][4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia