டெக்கான் ஒடிசி
![]() டெக்கான் ஒடிசி (Deccan Odyssey), இந்தியாவில் குறிப்பாக மகாராட்டிரம், இராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களை பார்வையிட இந்திய இரயில்வே சார்பில் எபிக்ஸ் டிராவல்ஸ் (Ebix Travels) எனும் தனியார் நிறுவனம் 2022ஆம் ஆண்டு முதல் இந்த இரயிலை இயக்குகிறது.[1][2][3][4]டெக்கான் ஒடிசி இரயில்கள் மே மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் இயக்கப்படுகிறது. டெக்கான் ஒடிசியின் சுற்றுலா 7 இரவுகள் மற்றும் 8 பகல்கள் கொண்டது.[5][6]தக்காண பீடபூமி பெயரில் இதற்கு டெக்கான் ஒடிசி எனப்பெயரிடப்பட்டது. ![]() பயண வசதிகள்முழுவதும் குளிர்பதனம் செய்யப்பட்ட 21 பெட்டிகள் கொண்ட டெக்கான் ஒடிசி இரயிலில் இணைய வசதி, தொலைக்காட்சி பெட்டி, வெளிநாட்டுப் பணப்பரிமாற்றச் சேவை, கூட்டரங்கம், சிறு உடற்பயிற்சி கூடம், நூலகம், அழகு நிலையம், மதுபான கூடம், முடிதிருத்தகம் போன்ற வசதிகள் கொண்டது.[7][5][8][9][2][10]மேலும் இந்த இரயிலில் தாஜ் ஹோட்டலின் இரண்டு உணவு விடுதிகள் உள்ளது.[9][7][3][11] பயண விவரங்கள்![]() 21 பெட்டிகள் கொண்ட டெக்கான் ஒடிசி இரயில் சுற்றுலா ஆறு வேறுபட்ட 7 இரவுகள் மற்றும் 7 பகல்கள் கொண்ட மகாராட்டிரம், இராஜஸ்தான் மற்றும் வட இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றி காண்பிக்கிறது. டெக்கான் ஒடிசி இரயில் மும்பை சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் மற்றும் புது தில்லி ஜப்தர்ஜங் இரயில் நிலையத்திலிருந்து பயணங்களை தொடங்கி, அதே இரயில் நிலையங்களில் பயணம் நிறைவு செய்கிறது.[8][2][7][6][9] 2024 முதல் பயண நிரல்
பயணக் கட்டணம்இது எட்டு பகல் மற்றும் 7 இரவுகள் கொண்ட இப்பயணத்தின் பெரும்பாலான சுற்றுலாவாசிகள் வெளிநாட்டினர் என்பதால் ஒரு நபருக்கு $8,330 அமெரிக்க டாலர் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.[12][3][9][6] மேற்கோள்கள்
. |
Portal di Ensiklopedia Dunia