கால்சியம் ஆர்சனேட்டு(Calcium arsenate) என்பது Ca3(AsO4)2.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். நிறமற்ற திண்மமான கால்சியம் ஆர்சனேட்டு தீங்குயிர்கொல்லியாகவும் நுண்ணுயிர் கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது.ஈய ஆர்சனேட்டுடன் ஒப்பிடுகையில் கால்சியம் ஆர்சனேட்டு தண்ணீரில் நன்றாகக் கரைகிறது, இதனால் அதிகமான நச்சுத்தன்மையையும் பெறுகிறது. இரௌவெந்தாலைட்டு Ca3(AsO4)2•10H2O மற்றும் பாவுனௌக்சைட்டு Ca3(AsO4)2•11H2O போன்ற கனிமங்கள் கால்சியம் ஆர்சனேட்டின் நீரேற்றுகளாகும்[4]
தயாரிப்பு
பொதுவாக இருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு மற்றும் கால்சியம் குளோரைடு சேர்மங்கள் வினைபுரிவதால் கால்சியம் ஆர்சனேட்டு உருவாகிறது.
1920 களில், கால்சியம் ஆக்சைடு மற்றும் ஆர்செனிக் ஆக்சைடு கலந்து பெருமளவில் கால்சியம் ஆர்சனேட்டு தயாரிக்கப்பட்டது[5] In the United States, 1360 metric tons were produced in 1919, 4540 in 1920, and 7270 in 1922.[1]. அமெரிக்காவில் 1919 ஆம் ஆண்டில் 1360 மெட்ரிக் டன், 1920 இல் 4540 மெட்ரிக் டன் மற்றும் 1922 இல் 7270 மெட்ரிக் டன் அளவுகளில் கால்சியம் ஆர்சனேட்டு தயாரிக்கப்பட்டது. தயாரிப்பாளர்களைப் பொருத்து ஆர்சனேட்டுகளின் பகுதிப்பொருட்கள் அளவுகளில் மாறுபடுகின்றன. குறிப்பாக அடிப்படையான ஒரு 80-85% Ca3(AsO4)2 இல் பொதுவாக 4CaO.As2O5 உடன் கால்சியம் ஐதராக்சைடு மற்றும் கால்சியம் கார்பனேட்டு சேர்மங்கள் கலந்துள்ளன[4].
களைக்கொல்லியாக
ஒரு காலத்தில் பொதுவான களைக்கொல்லி மற்றும் பூச்சிக் கொல்லியாக கால்சியம் ஆர்சனேட்டு பயன்படுத்தப்பட்டது. பருத்தி செடிகளை பாதுகாப்பதற்காக 1942 ஆம் ஆண்டில் மட்டும் 38,000,000 கிலோகிராம்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. கால்சியம் ஆர்சனேட்டின் அதிகப்படியான நச்சுத்தன்மை காரணமாக டி.டி.டீ எனப்படும் டைக்குளோரோ டைபீனைல் டிரைகுளோரோ ஈத்தேன் தயாரிப்பு அதிகரிக்கத் தொடங்கியது[6]
கட்டுப்பாடு
ஐக்கிய இராச்ச்சியத்தில் கால்சியம் ஆர்சனேட்டைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதன் பயன்பாடு கடுமையான விதிகளுடன் முறைப்படுத்தப்பட்டுள்ளது. நடைமுறையில், மாலின்கிராட்டு நிறுவனத்தின் தயாரிப்பான டர்ஃப் – கால் களைக்கொல்லியின் ஒரு பகுதிப்பொருளாக இருந்துவருகிறது. இக்களைக்கொல்லி மண்புழுவால் பாதிக்கப்படும் போவா அனுவா மற்றும் நண்டுப்புல் வகைகளை கட்டுப்படுத்துகிறது. கோல்ப் விளையாட்டு மைதானப் புற்களை மண்புழுவின் தாக்குதலில் இருந்து காக்க இக்களைக்கொல்லி பரிந்துரைக்கப்படுகிறது[7].
நச்சளவும் கட்டுப்பாடும்
கால்சியம் ஆர்சனேட்டு மிக அதிகமான நச்சுத்தன்மை கொண்டிருப்பதால் புற்றுநோய் உட்பட பல்வேறு உடல்நலக் கேடுகளுக்கு ஆளாக நேரிடுகிறது[8]. அமெரிக்காவின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம், எட்டு மணி நேரகாலத்தில் 0.01 மி.கி/மீ3 அளவை மட்டுமே அனுமதிக்கிறது. தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனமும் ஐந்துமுறை 0.02 மி.கி/மீ3 அளவுக்கும் குறைவாகவே அனுமதிக்கிறது[9]
மேற்கோள்கள்
↑ 1.01.1Tartar, H.V.; Wood, L; Hiner, E; A Basic Arsenate of Calcium. J. Am. Chem. Soc. 1924, vol. 46, 809-813.