தொப்பூர்11°56′24″N 78°03′29″E / 11.939998°N 78.05794°E தொப்பூர் (Thoppur) என்பது இந்தியாவில் உள்ள, தமிழ்நாடு மாநிலத்தின், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலை சிற்றூர் ஆகும். இது தர்மபுரி மாவட்டத்திற்கும், சேலம் மாவட்டத்திற்கும் இணைப்புப் பாலமாக, தேசிய நெடுஞ்சாலை 44இல், மேட்டூர் அணை சாலை (மா. நெ 20) சந்திப்பில் உள்ளது. இது சேலம் மாநகருக்கு வடக்கே 35 கிலோமீட்டர் (22 மைல்) மற்றும் தர்மபுரி நகருக்கு தெற்கே 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவிலும் உள்ளது. தொப்பூரானது தொப்பையாறு அணை, முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில், பெருமாள் கோவில் (வனகுண்ட மலை) ஆகியவற்றுக்காக பெயர் பெற்றது. மேலும் தொப்பூரானது முசுலீம்களின் புனிதத் தலமான ஹஸ்ரத் சையத் ஷா வலி உல்லா (தொப்பூர் தர்கா) அமைந்துள்ள இடமாகும். போக்குவரத்துதொப்பூர் தேசிய நெடுஞ்சாலை 44 இல் உள்ளது, இது இந்தியாவின் முக்கிய வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையாகும். [1] இது மேட்டூர் நகரத்தையும் ஈரோடு நகரத்தையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 20 இன் இணைப்புப் புள்ளியாகும். [2] மா. தெ-44, தமிழ்நாட்டில் தருமபுரி மற்றும் தொப்பூர் இடையே உள்ள கணவாய் சாலையானது, மலைப்பாங்கான சரிவுகள் கொண்ட மோசமான சாலையாகும் இதன் வடிவமைப்பு காரணமாக அபாயகரமான விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இச்சாலையை அகலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளது.[3][4] மக்கள் தொகைஇவ்வூரில் சுமார் 2300 குடும்பங்கள் வசிக்கின்றன. 4883 ஆண்கள் , 4468 பெண்கள் , 1041 குழந்தைகள் உட்பட மொத்தம் 10392 மக்கள்தொகை கொண்டுள்ளது. சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia