சமாரியம்(III) ஆக்சைடு
சமாரியம்(III) ஆக்சைடு (Samarium(III) Oxide) என்பது Sm2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். பயன்கள்ஒளியியல் கருவிகள் மற்றும் அகச்சிவப்புக் கதிர்வீச்சை உறிஞ்சும் அகச்சிவப்புக் கதிர் உறிஞ்சும் கண்ணாடிகள் தயாரிக்க சமாரியம்(III) ஆக்சைடு பயன்படுகிறது. மேலும் அணுக்கரு உலைகளில் உள்ள கட்டுப்பாட்டுக் கழிகளில் நியூட்ரான் உறிஞ்சியாகவும் இது பயன்படுகிறது. வளையமில்லா முதல்நிலை ஆல்ககால்களை ஆல்டிகைடுகள் மற்றும் கீட்டோனாக மாற்றும் வினைகளில் சமாரியம்(III) ஆக்சைடு வினையூக்கியாகப் பயன்படுகிறது. இவை தவிர பிற சமாரியம் உப்புகள் தயாரிப்பிலும் இது பயனாகிறது[1]. தயாரிப்புசமாரியம்(III) ஆக்சைடை இரண்டு வழிகளில் தயாரிக்கலாம்.
வினைகள்கனிம அமிலங்களில் சமாரியம்(III) ஆக்சைடு கரைந்து ஆவியாக்குதல் மற்றும் படிகமாக்குதல் வினைகளால் உப்புகளாக உருவாகிறது.
ஐதரசன் அல்லது கார்பன் ஓராக்சைடு போன்ற ஆக்சிசன் ஒடுக்கிகளுடன் சமாரியம்(III) ஆக்சைடு உயர் வெப்பநிலைகளில் வினைபுரிவதால் சமாரியம் உலோகமாக ஒடுக்கப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia