புரோமித்தியம்(III) ஆக்சைடு
புரோமித்தியம்(III) ஆக்சைடு (Promethium(III) oxide) என்பது Pm2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மம் ஆகும். பொதுவாகப் பரவலாகக் காணப்படும் புரோமித்தியம் சேர்மமாக, புரோமித்தியம்(III) ஆக்சைடு காணப்படுகிறது. படிக அமைப்புபுரோமித்தியம்(III) ஆக்சைடு முக்கியமான மூன்று படிகவமைப்புகளில் காணப்படுகிறது:[1]
a,b,c (நானோ மீட்டர்| நா.மீ) என்பவை அணிக்கோவை அளபுருக்கள்,Z என்பது அணிக்கோவை தளத்தின் ஒரு அலகுக்கூட்டில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை, எக்சு கதிர் படிகவியல் தரவுகளில் இருந்து பெறப்பட்டது. தாழ்வெப்பநிலை எளிய கனசதுரவடிவ அமைப்பானது 750 முதல் 800 பாகை வெப்பநிலைக்கு சூடுபடுத்தும்போது ஒற்றைச்சரிவு வடிவமைக்கு மாறுகிறது. ஆக்சைடை உருகவைத்தால் மட்டுமே இம்மாற்றம் மீட்சியடைகிறது. சுமார் 1740 பாகை வெப்பநிலைக்கு சூடாக்கினால் ஒற்றைசரிவு அமைப்பில் இருந்து அறுகோண கட்டுமான அமைப்புக்கு மாற்றவியலும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia