பிரசியோடைமியம்(III) ஆக்சைடு(Praseodymium(III) oxide) என்பது Pr2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியம், ஆக்சிசன் இரண்டும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தை பிரசியோடைமியம் ஆக்சைடு அல்லது பிரசியோடைமியா என்ற பெயர்களாலும் அழைக்கிறார்கள். வெண்மை நிறத்தில் அறுகோணப் படிகங்களாக இது உருவாகிறது. மேலும், இது மாங்கனீசு(III) ஆக்சைடு அல்லது பிக்சுபைட்டு கட்டமைப்பில் படிகமாகிறது.
பயன்கள்
பிரசியோடைமியம்(III) ஆக்சைடுடன் சிலிக்கன் தனிமத்தைச் சேர்த்து மின்கடத்தாப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். பிரசியோடைமியம் கலந்த டைடிமியம் கண்ணாடிகள் பற்றவைப்பு தொழிலில் பயன்படும் கண்ணாடிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இக்கண்ணாடிகள் மஞ்சள் நிறமாக மாறி அகச்சிவப்பு கதிரியக்கத்தைத் தடுக்கின்றன. வண்ணக்கண்ணாடிகள், மஞ்சள் நிற பீங்கான்கள் தயாரிப்பில் இதைப் போன்றவையும் பயன்படுத்துகிறார்கள். [2]. பிரசியோடைமியம்((III) (IV)), ஆக்சைடு, Pr6O11 போன்றவையும் வண்ணப்பீங்கான் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
↑ 1.01.1
Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 478, 523, ISBN0-8493-0594-2