குரோமியம்(III) ஆக்சைடு
குரோமியம்(III) ஆக்சைடு (Chromium(III) oxide) என்பது Cr2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை குரோமியா என்றும் அழைப்பார்கள். குரோமியத்தின் முக்கியமான ஆக்சைடுகளுள் இதுவும் ஒன்றாகும். ஒரு நிறமியாக இதைப் பயன்படுத்துகிறார்கள். இயற்கையில் இச்சேர்மம் எசுகோலைட்டு என்ற கனிமமாகக் கிடைக்கிறது. கட்டமைப்புஅலுமினியம் ஆக்சைடின் படிக வடிவமான கொரண்டம் கட்டமைப்பை குரோமியம்(III) ஆக்சைடு ஏற்கிறது. அறுகோண நெருக்கப்பொதிவு வரிசையில் ஆக்சைடு எதிர்மின் அயனிகளுடன் எண்முகத் துளைகளின் ⅔ பகுதியை குரோமியம் ஆக்ரமித்துள்ள அமைப்பை இவ்வடிவம் கொண்டுள்ளது. பண்புகள்கொரண்டத்தைப் போலவே குரோமியம்(III) ஆக்சைடும் கடினத்தன்மையும், நொறுங்கும் பண்பும் கொண்டதாக உள்ளது. இதன் மோ கடினத்தன்மை மதிப்பு 8 முதல் 8.5 ஆகும்[2]. 307 கெல்வின் வெப்பநிலைவரை அதாவது இதன் நீல் வெப்பநிலை வரை இது எதிர் அயக்காந்தத்தன்மையுடன் இருக்கிறது[3][4]. அமிலங்களால் குரோமியம்(III) ஆக்சைடு பாதிக்கப்படுவதில்லை. தோற்றம்![]() குரோமியம்(III) ஆக்சைடு இயற்கையில் எசுகோலைட்டு என்னும் கனிமமாகக் கிடைக்கிறது. குரோமியம் நிறைந்த டிரெமோகைட்டு எனப்படும் கால்சு சிலிக்கேட் படிவுகளாகவும், இடைப்படிகங்களாகவும், குளோரைட்டு பரவல்களிலும் கனிமம் எசுகோலைட்டு காணப்படுகிறது. மேலும், எசுகோலைடு விண்கற்களில் காணப்படும் காண்ட்ரைட்டு எனப்படும் வேதி எரிகற்களிலும் அரிதாகக் காணப்படுகிறது. பின்லாந்தைச் சேர்ந்த புவியியலாளர் பெண்டிட் எசுகோலாவின் பெயர் இக்கனிமத்திற்கு இடப்பட்டுள்ளது[2]. தயாரிப்புஒளிபுகு நீரேற்று வடிவமான Cr2O3 முதன்முதலில் 1838 ஆம் ஆண்டு ஒரு இரகசியமான செயல்முறையினால் தயாரிக்கப்பட்டு நிறமியாக விற்கப்பட்டது[5]. பிரதானமான குரோமைட்டு (Fe,Mg)Cr2O4 கனிமத்திலிருந்து இது வருவிக்கப்பட்டது. குரோமைட்டிலிருந்து குரோமியா Na2Cr2O7 வழியாகக் கிடைத்தது. இது உயர்வெப்பநிலையில் கந்தகத்துடன் சேர்த்து ஒடுக்கப்படுகிறது:[6]. Na2Cr2O7 + S → Na2SO4 + Cr2O3 குரோமியம் நைட்ரேட்டு போன்ற குரோமியம் உப்புகளைச் சிதைப்பதாலும் அல்லது அமோனியம் டைகுரோமேட்டின் வெப்ப உமிழ்வு சிதைவு வினையாலும் குரோமியம்(III) ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. (NH4)2Cr2O7 → Cr2O3 + N2 + 4 H2O இவ்வினை 200 பாகை செல்சியசிற்கும் குறைவான தீப்பற்று வெப்பநிலைகளில் நிகழ்கிறது. பெரும்பாலும் எரிமலை வெடிப்பு செயல்முறைக் காட்சிகளில் இது பயன்படுத்தப்படுகிறது[7]. பயன்பாடுகள்இதன் கணிசமான நிலைப்புத் தன்மை காரணமாக அதன் கணிசமான உறுதியற்ற தன்மை காரணமாக, குரோமியா பொதுவாக நிறமியாகப் பயன்படுத்தப்படுகிறது. விரிடியன் என்ற பெயரால் அழைக்கப்படும் இந்நிறமி வண்ணப்பூச்சுகள், மை, கண்ணாடி ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. குரோம் பச்சை மற்றும் நிறுவனப் பச்சை போன்ற வண்ணங்களில் நிறமூட்டப் பயன்படுகிறது. காந்த நிறமியான குரோமியம் டையாக்சைடைத் தயாரிக்க உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும் குரோமியம்(III) ஆக்சைடு பயன்படுகிறது:[6]. Cr2O3 + 3 CrO3 → 5 CrO2 + O2 மற்ற பல ஆக்சைடுகள் போலவே இதுவும் கத்திகளின் முனைகள் போன்ற கூர்மையாக்கும் சேர்மங்களில் பயன்படுகிறது. தூள் அல்லது மெழுகு வடிவில் குரோமியம்(III) ஆக்சைடு கிடைக்கிறது. இப்பயன்பாட்டில் இது பச்சை சேர்மம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. வினைகள்குரோமியம்(III) ஆக்சைடு ஓர் அமிலம் அல்லது காரமாகச் செயல்படக்கூடிய ஓர் ஈரியல்புச் சேர்மமாகும். தண்ணிரில் இது கரையாது. அமிலத்தில் கரைந்து நீரேற்று குரோமியம் அயனிகளை இது உருவாக்குகிறது. [Cr(H2O)6]3+ காரங்களுடன் வினைபுரிந்து [Cr(OH)6]3− இன் உப்புகளைக் கொடுக்கிறது. இது அடர்த்தியான காரங்களில் கரைந்து குரோமைட்டு அயனிகளைக் கொடுக்கிறது. குரோமியம்(III) ஆக்சைடு அலுமினியத்துடன் வினைபுரியும் போது குரோமியத்தையும் அலும்னியம் ஆக்சைடையும் கொடுக்கிறது. Cr2O3 + 2 Al → 2 Cr + Al2O3 பாரம்பரியமான இரும்பு ஆக்சைடுகள் பங்கேற்கும் தெர்மைட்டு எனப்படும் அனல் வினையைப் போலில்லாமல் குரோமியம் ஆக்சைடு அனல் வினை சில பொறிகள் அல்லது பொறியில்லாமல் நிகழ்கிறது. புகையோ ஒலியோ ஏற்படுவதில்லை. ஆனால் பிரகாசமாக வினை நிகழ்கிறது. குரோமியத்தின் அதிகப்படியான உருகுநிலை காரணமாக குரோமிய அனல் வார்ப்பு நடைமுறையில் இருப்பதில்லை. குரோமியம்(III) ஆக்சைடுடன் குளோரின் மற்றும் கார்பன் சேர்த்து சூடுபடுத்தும் போது குரோமியம்(III) குளோரைடும் கார்பனோராக்சைடும் உருவாகின்றன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia