நியோடிமியம்(III) ஐதரைடு (Neodymium(III) hydride ) என்பது NdH3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் .[ 2] [ 3] நியோடிமியமும் ஐதரசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. அதிக வினைத்திறன் கொண்ட இச்சேர்மத்தில் இந்த சேர்மத்தில், நியோடிமியம் அணு +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் ஐதரசன் அணு -1 என்ற நிலையிலும் உள்ளன.[ 4] .
தயாரிப்பு
நியோடிமியம் தனிமத்தையும் ஐதரசன் வாயுவையும் நேரடியாக வினைபுரியச் செய்து நியோடிமியம்(III) ஐதரைடு சேர்மத்தை தயாரிக்கலாம்:[ 5]
2Nd + 3H2 → 2NdH3
நியோடிமியம்(II) ஐதரைடை ஐதரசனேற்றம் செய்வதன் மூலமாகவும் இதை தயாரிக்கலாம்.[ 6]
பண்புகள்
a=0.385 நானோமீட்டர், c=0.688 நானோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் நியோடிமியம்(III) ஐதரைடு அறுகோணப் படிக அமைப்பில் நீலநிறப் படிகங்களாகக் காணப்படுகிறது.[ 7]
நியோடிமியம்(III) ஐதரைடு தண்ணீருடன் வினைபுரிந்து நியோடிமியம் ஐதராக்சைடு மற்றும் ஐதரசன் வாயுவை உருவாக்குகிறது:[ 8]
NdH3 + 3 H2 O → Nd(OH)3 + 3 H2
மேலும் காண்க
மேற்கோள்கள்
↑ "Neodymium hydride (NdH3)" . pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). Retrieved 26 March 2022 .
↑ Химия и технология редких и рассеянных элементов, ч. II . М.: Высш. школа. 1976.
↑ Диаграммы состояния двойных металлических систем . Vol. 1. М.: Машиностроение. 1996. ISBN 5-217-02688-X .
↑ The 5f3 vs. 4f3. Routes to and properties of highly reactive neodymium(III) hydrocarbyl and hydride complexes
Heiko Mauermann, Paul N. Swepston, and Tobin J. Marks
Organometallics 1985 4 (1), 200-202
DOI: 10.1021/om00120a036
↑ Richter, Bo; Grinderslev, Jakob B.; Møller, Kasper T.; Paskevicius, Mark; Jensen, Torben R. (Aug 23, 2018). "From Metal Hydrides to Metal Borohydrides". Inorganic Chemistry (American Chemical Society (ACS)) 57 (17): 10768–10780. doi :10.1021/acs.inorgchem.8b01398 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0020-1669 . பப்மெட் :30137973 .
↑ Fukai, Y. (2005). The Metal-Hydrogen System, Basic Bulk Properties, 2d edition . Springer. ISBN 978-3-540-00494-3 .
↑ Peterson, D. T.; Poskie, T. J.; Straatmann, J. A. (1971-02-01). "Neodymium-neodymium hydride phase system" (in en). Journal of the Less Common Metals 23 (2): 177–183. doi :10.1016/0022-5088(71)90078-6 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0022-5088 . https://dx.doi.org/10.1016/0022-5088%2871%2990078-6 .
↑ Widerøe, Marius; Fjellvåg, Helmer; Norby, Truls; Willy Poulsen, Finn; Willestofte Berg, Rolf (2011-07-01). "NdHO, a novel oxyhydride" (in en). Journal of Solid State Chemistry 184 (7): 1890–1894. doi :10.1016/j.jssc.2011.05.025 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0022-4596 . Bibcode: 2011JSSCh.184.1890W . https://www.sciencedirect.com/science/article/pii/S002245961100274X .