இலித்தியம் நைட்ரைடு மற்றும் நீரற்ற நியோடிமியம்(III) குளோரைடு ஆகியவற்றுக்கு இடையேயான வெப்பவுமிழ் அணுப்பரிமாற்ற வினையின் மூலம் நியோடிமியம்(III) நைட்ரைடு தயாரிக்கப்படுகிறது. வினையில் உருவாகும் இலித்தியம் குளோரைடை டெட்ரா ஐதரோ பியூரானில் கரைத்து நீக்கப்படுகிறது.[4]
NdCl3 + Li3N → NdN + 3 LiCl
நியோடிமியம் நேரடியாக நைட்ரசனுடன் வினைபுரிவதாலும் நியோடிமியம்(III) நைட்ரைடு உருவாகிறது.
நியோடிமியத்தை காற்றில் பற்ற வைக்கும்போதும் நியோடிமியம்(III) நைட்ரைடு உருவாகிறது. காற்றில் உள்ள நைட்ரசன் வாயு இவ்வினையில் பங்கேற்கிறது.[5] ஆனால் வினையில் நியோடிமியம் ஆக்சைடு போன்ற பிற வேதிப்பொருள்களும் உருவாகும்.
↑Temmerman, W. M. (2009). "Chapter 241: The Dual, Localized or Band‐Like, Character of the 4f‐States". In Gschneider Jr., K. A. (ed.). Handbook on the Physics and Chemistry of Rare Earths vol 39. Elsevier. pp. 100–110. ISBN978-0-444-53221-3.
↑Nasirpouri, Farzad and Nogaret, Alain (eds.) (2011) Nanomagnetism and Spintronics: Fabrication, Materials, Characterization and Applications. World Scientific. பன்னாட்டுத் தரப்புத்தக எண்9789814273053