நியோடிமியம்(III) சல்பைடு
நியோடிமியம்(III) சல்பைடு (Neodymium(III) sulfide) என்பது Nd2S3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2] நியோடிமியமும் கந்தகமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இச்சேர்மத்தில் இரண்டு நியோடிமியம் அணுக்கள் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் மூன்று கந்தக அணுக்கள் +2 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் காணப்படுகின்றன. மற்ற அருமண் சல்பைடுகளைப் போலவே, நியோடிமியம்(III) சல்பைடும் உயர் செயல்திறன் கொண்ட கனிம நிறமியாகப் பயன்படுத்தப்படுகிறது.[3] தயாரிப்புநியோடிமியமும் கந்தகமும் சேர்ந்து நேரடியாக வினைபுரிவதால் நியோடிமியம்(III) சல்பைடு உருவாகிறது.[4]
நியோடிமியம் ஆக்சைடை ஐதரசன் வாயு முன்னிலையில் ஐதரசன் சல்பைடுடன் 1450 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதன் மூலமும் இதை தயாரிக்கலாம்:[5][6]
பண்புகள்நியோடிமியம்(III) சல்பைடு மூன்று வடிவங்களில் கிடைக்கிறது.[3] α-வடிவம் செஞ்சாய்சதுரப் படிக அமைப்பைக் கொண்டுள்ளது, β வடிவம் நாற்கோண படிக அமைப்பைக் கொண்டுள்ளது. மற்றும் γ வடிவம் கனசதுரப் படிக அமைப்பில் வெளிர்பச்சை நிற திண்மமாகக் காணப்படுகிறது. வெற்றிடத்தில் 1650 °செல்சியசு வெப்பநிலையில் γ வடிவ நியோடிமியம்(III) சல்பைடு சிதைந்து நியோடிமியம் மோனோசல்பைடை உருவாக்குகிறது. [6] நியோடிமியம்(III) சல்பைடு அதிக உருகுநிலை கொண்டதாகும். மேலும் இது பல பல்லுருவ வடிவங்களையும் கொண்டுள்ளது. இதனால் படிகவளர்ச்சி கடினமாகும்.[2] வெப்பமடையும் போது, நியோடிமியம்(III) சல்பைடு கந்தக அணுக்களை இழக்கிறது. Nd2S3 மற்றும் Nd3S4 சேர்மங்களுக்கு இடையில் வெவ்வேறு சேர்மங்களாக மாற்றமடைகிறது. நியோடிமியம்(III) சல்பைடு ஒரு மின் கடத்தாப் பொருளாகும்.[5] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia