நியோடிமியம்(II) அயோடைடு (Neodymium(II) iodide) என்பது NdI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். நியோடிமியமும் அயோடினும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. நியோடிமியம் ஈரயோடைடு, நியோடிமியம் டையையோடைடு என்ற பெயர்களாலும் இது அடையாளப்படுத்தப்படுகிறது. நியோடிமியம்(II) அயோடைடு சேர்மத்தில் நியோடிமியம் +2 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது.
கருநீல நிறத்தில் ஒரு திண்மமாக நியோடிமியம்(II) அயோடைடு காணப்படுகிறது.[1] இச்சேர்மத்தின் உட்கூறுகள் விகிதாச்சார அளவுகளில் இல்லை.[3] 562 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது உருகும்.[4]
தயாரிப்பு
உருகிய நிலையிலுள்ள நியோடிமியம்(III) அயோடைடுடன் நியோடிமியம் உலோகத்தைச் சேர்த்து 800 மற்றும் 580 பாகை செல்சியசு வெப்பநிலையில் 12 மணி நேரம் சூடாக்குவதன் மூலம் நியோடைமியம்(II) அயோடைடு சேர்மத்தை உருவாக்கலாம்.[3] 800 முதல் 900 பாகை செல்சியசு வெப்பநிலை வரை வெற்றிடத்தில் நியோடிமியம்(III) அயோடைடுடன் நியோடிமியம் உலோகத்தைச் சேர்த்து குறைத்தல் வினையில் ஈடுபடுத்தியும் இதைப் பெறலாம்.:[1]
Nd + 2NdI3 → 3NdI2
பாதரசம்(II) அயோடைடுடன் நியோடிமியத்தைச் சேர்த்து வினை புரியச் செய்து தயாரிப்பதும் சாத்தியமாகும். ஏனெனில் நியோடிமியம் பாதரசத்தை விட அதிக வினைத்திறன் கொண்டது.:[1]
Nd + HgI2 → NdI2 + Hg
அயோடின் மற்றும் நியோடிமியம் தனிமங்களை நேரடியாக வினையில் ஈடுபடுத்தும் நேரடி தயாரிப்பும் சாத்தியமாகும்:[5]
Nd + I2 → NdI2
1961 ஆம் ஆண்டில் இயான் டி. கார்பெட்டு என்பவரால் நியோடிமியம்(II) அயோடைடு முதன்முதலில் தயாரிக்கப்பட்டது.[6]
பண்புகள்
நியோடிமியம்(II) அயோடைடு ஒரு கருநீல நிறத் திண்மப்பொருளாகும்.[1] மிகவும் நீருறிஞ்சும் தன்மை கொண்டது. உலர்ந்த மந்த வாயுவின் கீழ் அல்லது அதிக வெற்றிடத்தின் கீழ் மட்டுமே இச்சேர்மத்தை சேமித்து கையாள முடியும்.[7] காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுவதன் மூலம் இது நீரேற்றாக மாறும். ஆனால் இவை நிலையற்றவை. அதிகமாகவோ அல்லது குறைவாகவோ விரைவாக ஐதரசனை வெளியேற்றி ஆக்சைடு அயோடைடுகளாக இவை மாறுகின்றன:
2NdI2 + 2H2O → 2NdOI + H2↑ + 2HI
நியோடிமியம்(II) அயோடைடு சேர்மத்தின் உட்கூறுகள் விகிதவியல் அளவுகளில் இருக்காது. மேலும் இது NdI1.95 என்ற நெருக்கமான வாய்பாட்டைக் கொண்டுள்ளது.[3] இது 562° செல்சியசு வெப்பநிலையில் உருகும்.[4]இசுட்ரோன்சியம்(II) புரோமைடு வகை படிகக் கட்டமைப்பை நியோடிமியம்(II) அயோடைடும் ஏற்றுக் கொள்கிறது.[1] அழுத்தத்தின் கீழ், இது பொதுவாக உலோகமிடை சேர்மத்தில் காணப்படும் மாலிப்டினம் இருசிலிசைடு கட்டமைப்புக்கு மாறுகிறது. ஏற்கனவே மற்ற அருமண் ஈரயோடைடுகளில் (எ.கா. பிரசியோடைமியம்(II) அயோடைடு மற்றும் இலந்தனம்(II) அயோடைடு) இயல்பான நிலையில் உள்ளது.[8] டெட்ரா ஐதரோ பியூரான் மற்றும் பிற கரிமச் சேர்மங்களுடன் சேர்ந்து அணைவுச் சேர்மங்களையும் நியோடிமியம்(II) அயோடைடு உருவாக்குகிறது.[9][10][11]
நியோடிமியம்(II) அயோடைடு ஒரு மின்சார அரிதிற் கடத்தியாகும்.[3]
வினைகள்
நியோடிமியம்(II) அயோடைடு ஆலசனைப் பிரித்தெடுப்பதன் மூலம் கரிம ஆலைடுகளுடன் வினைபுரிகிறது. இதன் விளைவாக இருபடிகள், சில்படிமங்கள் அல்லது கரைப்பானுடன் வினைகள் ஏற்படுகின்றன.[11]
டெட்ரா ஐதரோ பியூரான் மற்றும் டைமெத்தாக்சியீத்தேன் ஆகியவற்றுடன் கரைசல்கள் அறியப்படுகின்றன: NdI2(THF)2 மற்றும் NdI2(DME)2.[12]
நியோடிமியம்(II) அயோடைடு சூடான நைட்ரசனுடன் சேர்ந்து அயோடைடு நைட்ரைடை உருவாக்குகிறது: (NdI2)3N) இது டெட்ரா ஐதரோ பியூரானுடன் வினையில் ஈடுபட்டு (NdI)3N2 சேர்மத்தை தருகிறது.[13]
டெட்ரா ஐதரோ பியூரானிலுள்ள வளைய பெண்டாடையீனுடன் சேர்ந்து CpNdI2(THF)3 என்ற சேர்மத்தைக் கொடுக்கிறது.[14]
பயன்கள்
கரிம வேதியியலில்[15]நியோடிமியம்(II) அயோடைடு ஒடுக்கும் முகவராகவும் வினையூக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[16]
↑ 3.03.13.23.3Sallach, Robert A.; Corbett, John D. (July 1964). "Magnetic Susceptibilities of Neodymium (II) Chloride and Iodide". Inorganic Chemistry3 (7): 993–995. doi:10.1021/ic50017a015.
↑ 4.04.1Druding, Leonard F.; Corbett, John D. (June 1961). "Lower Oxidation States of the Lanthanides. Neodymium(II) Chloride and Iodide 1". Journal of the American Chemical Society83 (11): 2462–2467. doi:10.1021/ja01472a010.
↑Angelika Jungmann, R. Claessen, R. Zimmermann, G. e. Meng, P. Steiner, S. Hüfner, S. Tratzky, K. Stöwe, H. P. Beck: Photoemission of LaI2 and CeI2. In: Zeitschrift für Physik B Condensed Matter. 97, 1995, S. 25–34, எஆசு:10.1007/BF01317584.
↑G. V. Khoroshen kov, A. A. Fagin, M. N. Bochkarev, S. Dechert, H. Schumann: Reactions of neodymium(II), dysprosium(II), and thulium(II) diiodides with cyclopentadiene In: Russian Chemical Bulletin. 52, S. 1715–1719, எஆசு:10.1023/A:1026132017155.
↑Fagin, A. A.; Salmova, S. V.; Bochkarev, M. N. (January 2009). "Reduction of nitrogen with neodymium(II) and dysprosium(II) diiodides and selected properties of the resulting nitrides". Russian Chemical Bulletin58 (1): 230–233. doi:10.1007/s11172-009-0034-2.
↑Khoroshen'kov, G. V.; Fag, A. A.; Bochkarev, M. N.; Dechert, S.; Schumann, H. (1 August 2003). "Reactions of neodymium(ii), dysprosium(ii), and thulium(ii) diiodides with cyclopentadiene. Molecular structures of complexes CpTmI2(THF)3 and [NdI2(THF)5]+[NdI4(THF)2]–". Russian Chemical Bulletin52 (8): 1715–1719. doi:10.1023/A:1026132017155.