நூருல் இசா அன்வார்
![]() நூருல் இசா அன்வார் (Nurul Izzah Anwar; மலாய்: Nurul Izzah binti Anwar; சீனம்: 努鲁依莎); பிறப்பு: 19 நவம்பர் 1980) என்பவர் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி; மலேசிய நிதி அமைச்சின் சிறப்பு ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவர் (Co-chairperson of the Secretariat of the Special Advisory Body) பதவியை வகித்த மலேசிய அரசியல்வாதி;[1] மற்றும் இவரின் தந்தையார் அன்வர் இப்ராகீம் தற்போதைய மலேசியப் பிரதமர் ஆவார். 2018 டிசம்பர் 4-ஆம் தேதியில் தொடங்கி 2019 சூலை 18-ஆம் தேதி வரையில் மலேசிய மக்களவை மசோதாக்கள் தேர்வுக் குழுவின் தலைவர் (Consideration of Bills Select Committee of Malaysia) பதவி; 2023 சனவரி முதல் 2023 பிப்ரவரி மாதம் வரையில்; அவர் பதவி துறப்பு செய்யும் வரையில் பிரதமர் அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் பொருளாதாரம் மற்றும் நிதி தொடர்பான மூத்த ஆலோசகராகவும் (Senior Advisor on Economics and Finance) பணியாற்றினார்.[2][3] 2008 மார்ச் 8-ஆம் தேதியில் இருந்து 2018 மே 9-ஆம் தேதி வரையில்; ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு லெம்பா பந்தாய் (Lembah Pantai Federal Constituency) நாடாளுமன்ற உறுப்பினராகவும்; 2018 மே 9-ஆம் தேதியில் இருந்து 2022 நவம்பர் 19-ஆம் தேதி வரையில்; பெர்மாத்தாங் பாவ் (Permatang Pauh Federal Constituency) நாடாளுமன்ற உறுப்பினராகவும் சேவை செய்தவர். பொதுபாக்காத்தான் அரப்பான் (Pakatan Harapan) எனும் முந்தைய பாக்காத்தான் ராக்யாட் (Pakatan Rakyat) எதிர்க்கட்சிக் கூட்டணியின் ஓர் அங்கமான மக்கள் நீதிக் கட்சி (People's Justice Party) கட்சியில் நவம்பர் 2010 முதல் 2018 டிசம்பர் வரை; மற்றும் சூலை 2022 முதல் தற்போது வரையில் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[4] நூருல் இசா அன்வார், தம்புன் தொகுதி மக்களவை உறுப்பினரும் (Tambun Federal Constituency) மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகீம்; மற்றும் பண்டார் துன் ரசாக் மக்களவை உறுப்பினருமான (Bandar Tun Razak Federal Constituency) வான் அசிசா வான் இஸ்மாயில் (Wan Azizah Wan Ismail); ஆகியோரின் மூத்த மகள் ஆவார். நூருல் இசாவின் தந்தையார் அன்வர் இப்ராகீம்; தாயார் வான் அசிசா வான் இஸ்மாயில்; இருவருமே மலேசியாவின் துணைப் பிரதமர்களாக பதவி வகித்தவர்கள்.[5] கல்விநாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்பு இருந்தே, நூருல் இசா, மனித உரிமைச் செயல்பாடுகளுக்கு ஆதரவாளராக இருந்துள்ளார். இவர் மலேசிய தெனாகா பல்கலைக்கழகத்தில் (University Tenaga Nasional) இருந்து 2003-இல் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் அவர் ஐக்கிய அமெரிக்காவில் தம் மேல்படிப்பைத் தொடர்ந்தார். ஜான்ஸ் ஆப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் (Johns Hopkins University) பன்னாட்டு உறவுகளில் தென்கிழக்கு ஆசியா எனும் தலைப்பில் ஆய்வுகள் செய்து முதுகலைப் பட்டம் பெற்றார். தேர்தல்2008-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், நூருல் இசா கோலாலம்பூரில் லெம்பா பந்தாய் தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தொகுதியைத் தன் தந்தையிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் அவர் தேர்தலில் நின்றார் என்ற ஊகமும் இருந்தது. ஆனாலும் நூருல் இசா அத்தகைய ஊகங்களை நிராகரித்தார். இந்தக் கட்டத்தில் இவரின் தந்தையார் அன்வர் இப்ராகீம், மலேசியாவில் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்திய அன்வர் இப்ராகிம் பாற்புணர்ச்சி வழக்குகளில் இருந்து விடுதலையான காலக்கட்டமாகும்.[5] பாரிசான் நேசனல் அரசாங்கத்தில் மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சராக (Minister for Women, Family and Community Development) இருந்தவரும்; மூன்று முறை லெம்பா பந்தாய் தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும் இருந்த அமைச்சர் சரிசாத் அப்துல் ஜலீல் (Shahrizat Abdul Jalil), 2008-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், லெம்பா பந்தாய் தொகுதியைத் தற்காத்தார்.[5] 28 வயதில் மக்களவை உறுப்பினர் பதவிசரிசாத் அப்துல் ஜலீல் அந்த இடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொள்வார் என்று அரசியல் ஆய்வாளர்கள் பலர் எதிர்ப்பார்த்தனர். அவர் அந்தக் கட்டத்தில் மலேசியாவில் ஒரு பிரபலமான அமைச்சராக விளங்கினார். இவர் 2004-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் 15,288 பெரும்பான்மையுடன் லெம்பா பந்தாய் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டவர் ஆகும்.[5][6] இருப்பினும், 2008-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், நூருல் இசா 21,728 வாக்குகளைப் பெற்றார். சரிசாத் அப்துல் ஜலீல் 18,833 வாக்குகளைப் பெற்றார். 2,895 வாக்குகள் வித்தியாசத்தில் லெம்பா பந்தாய்க்கான புதிய மக்களவை உறுப்பினராக நூருல் இசா தேர்ந்து எடுக்கப்பட்டார். அப்போது நூருல் இசாவுக்கு வயது 28. சக்திவாய்ந்த அமைச்சர் தோல்வி2008-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் நடைபெற்ற பல வியப்பான நிகழ்ச்சிகளில், ஒரு புதிய முகத்தால் சக்திவாய்ந்த அமைச்சருக்கு ஏற்பட்ட இந்தத் தோல்வியும் ஒரு வியப்பான நிகழ்ச்சியாகும். அந்தத் தேர்தலில், நாடளாவிய நிலையில் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணிக்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு நாடாளுமன்றத் தொகுதி இழப்புகள் ஏற்பட்டன.[7] அதன் பின்னர் நவம்பர் 2010-இல், மக்கள் நீதிக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவராக நூருல் இசா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] அதன் பின்னர் 2013-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் அவர் குறுகிய பெரும்பான்மையில் நாடாளுமன்றத்திற்குத் திரும்பினார். இரு மூத்த அமைச்சர்கள் தோல்விஆளும் பாரிசான் நேசனல் கூட்டணி, அப்போதைக்கு ஓர் உயர்மட்ட அரசியல்வாதியாக இருந்த கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ராஜா நோங் சிக் சைனல் அபிடின் (Raja Nong Chik Zainal Abidin) என்பவரை நூருல் இசாவுக்கு எதிராக 2013-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் நிறுத்தியது. அதன் மூலம் நூருல் இசா குறிவைக்கப் பட்டார். இருப்பினும் நூருல் இசா அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அந்த வகையில் லெம்பா பந்தாய் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இரு மூத்த அமைச்சர்களும் தோல்வி கண்டனர். மே 2018-இல், பினாங்கில் உள்ள பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2022-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியிடம் தோல்வி அடையும் வரையில் பெர்மாத்தாங் பாவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia