பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதி
பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bandar Tun Razak; ஆங்கிலம்: Bandar Tun Razak Federal Constituency; சீனம்: 敦拉萨镇国会议席) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P124) ஆகும். பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1995-ஆம் ஆண்டில் இருந்து பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. பண்டார் துன் ரசாக்கோலாலம்பூர் மாநகரத்தில் அமைந்து உள்ள ஒரு புறநகர்ப்பகுதி. உயர்க்கல்வி நிலையங்களுக்கு புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது. மலேசியாவின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக்கின் நினைவாக இந்த நகரத்திற்குப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. பண்டார் துன் ரசாக், சுங்கை பீசி உத்திநோக்கு மண்டலத்தில் (Bandar Tun Razak - Sungai Besi Strategic Zone) அமைந்து உள்ளது.[5] பண்டார் துன் ரசாக் 1970-களில், கோலாலம்பூரில் ஒரு சிறிய நகரமாக இருந்தது. முன்னர் காலத்தில் கம்போங் காங்கோ (Kampung Konggo; Congo Village) என்று அழைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் 1960-ஆம் ஆண்டுகளில், காங்கோ குடியரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற மலேசிய இராணுவ வீரர்களுக்கான குடியேற்றப் பகுதியாக இருந்தது.[6] 1984 பிப்ரவரி 1-ஆம் தேதி மலேசியக் கூட்டாட்சி பிரதேசத்தின் 10-ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது மலேசியாவின் நான்காவது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் பின் முகமது அவர்களால், கம்போங் காங்கோ என்பது பண்டார் துன் ரசாக் என பெயர் மாற்றம் செய்யப் பட்டது. பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதி
பண்டார் துன் ரசாக் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
பண்டார் துன் ரசாக் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia