கூலிம்-பண்டார் பாரு மக்களவைத் தொகுதி
கூலிம்-பண்டார் பாரு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kulim-Bandar Baharu; ஆங்கிலம்: Kulim-Bandar Baharu Federal Constituency; சீனம்: 居林-万拉峇鲁国会议席) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டம் (Kulim District); பண்டார் பாரு மாவட்டம் (Bandar Baharu District); ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P018) ஆகும். கூலிம் மற்றும் பண்டார் பாரு என்ற இரண்டு நகரங்களின் பெயரால் இந்த தொகுதிக்கு பெயரிடப்பட்டு இன்றும் பயன்படுத்தப்படுகிறது.[1] கூலிம்-பண்டார் பாரு தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பாலிங் தொகுதி 41 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[2] பொதுகூலிம் மாவட்டம்கூலிம் மாவட்டம் (மலாய்:Daerah Kulim; ஆங்கிலம்:Kulim District) கெடா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் கெடா மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் பினாங்கு மாநிலத்தை எல்லையாகக் கொண்டு உள்ளது. பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு கிழக்கே (27 km (17 mi)) தொலைவில் உள்ளது. நிர்வாகப் பிரிவுகள்கூலிம் மாவட்டம் 15 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[3] கூலிம் மாவட்டத்தைக் கூலிம் நகராட்சி மன்றம் நிர்வகிக்கிறது.
பண்டார் பாரு மாவட்டம்பண்டார் பாரு மாவட்டம் (Bandar Baharu District) கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்திற்கு ஒரு கட்டத்தில் பண்டார் கரஸ்டேசியா (Bandar Crustacea) என மறுபெயரிட முன்மொழியப்பட்டது. அத்துடன் பண்டார் பாரு ஒரு நகரம், ஒரு மாவட்டம் மற்றும் ஒரு மாநிலச் சட்டமன்றத் தொகுதியும் ஆகும். கெடா மாநிலத்தின் தெற்கு முனையில் உள்ளது.[4]) கெடா மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில், பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு தென்கிழக்கே 27 கி.மீ. தொலைவில், கெடா - பினாங்கு - பேராக் மாநிலங்களின் எல்லை முக்கோணத்தில் அமைந்துள்ளது. கூலிம்-பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கூலிம்-பண்டார் பாரு தேர்தல் முடிவுகள்
கூலிம்-பண்டார் பாரு வேட்பாளர் விவரங்கள்
கூலிம்-பண்டார் பாரு சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
மேற்கோள்கள்
மேலும் காண்க
|
Portal di Ensiklopedia Dunia