தம்புன் மக்களவைத் தொகுதி
தம்புன் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tambun; ஆங்கிலம்: Tambun Federal Constituency; சீனம்: 和丰国会议席) என்பது மலேசியா, பேராக், கிந்தா மாவட்டத்தில் (Kinta District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P063) ஆகும்.[7] தம்புன் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1986-ஆம் ஆண்டில் இருந்து தம்புன் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. தம்புன்தம்புன் நகரம் பேராக் மாநிலத்தில் கிந்தா மாவட்டத்தில் உள்ள நகரம். ஈப்போவில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும் கோலாலம்பூர் தலைநகரிலிருந்து 200 கி.மீ தொலைவிலும் உள்ளது. 1990-ஆம் ஆண்டு தம்புன் புது நகரம் உருவாக்கப் பட்டது. தம்புன் எனும் மலாய்ச் சொல் பம்ப்ளிமாஸ் பழத்தைக் குறிக்கும். இங்கு அதிகமாகச் சீனர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் ஒரு நூற்றாண்டு காலமாகப் பம்ப்ளிமாஸ் பழங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். தம்புன் குகை ஓவியங்கள்தம்புன் பகுதியைச் சுற்றிலும் நிறைய சுண்ணக்கல் மலைகள் உள்ளன. இங்குள்ள மண் கறுப்பாகவும் இரும்பு வளம் கொண்டதாகவும் இருக்கின்றது. கிராமப் புறங்களில் நிறைய சுண்ணாம்புக் குன்றுகளையும் காண முடியும். இவை அழகும் இயற்கையான வனப்பும் வாய்ந்தவை. இங்கு பென்சில் வடிவத்தில் ஓர் அழகிய சுண்ணாம்புக் குன்று உள்ளது. அதைக் காண பார்வையாளர்கள் வெளிநாடுகளில் இருந்து வருகின்றனர். இங்குள்ள தம்புன் குகையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆதி குகைவாசிகள் வரைந்த ஓவியங்கள் உள்ளன. இதே போல ஓவியங்கள் லெங்கோங்கிலும் கண்டுபிடிக்கப் பட்டன. பொது மக்கள் பார்வைக்கு தம்புன் குகை ஓவியங்கள் குகை இன்னும் திறந்து விடப் படவில்லை. இருப்பினும், வரலாற்று ஆய்வாளர்கள் அரசு அனுமதியுடன் ஆய்வு செய்ய அனுமதிக்கப் படுகின்றனர். தம்புன் மக்களவைத் தொகுதி![]()
தம்புன் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
தம்புன் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia