லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதி
லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Lembah Pantai; ஆங்கிலம்: Lembah Pantai Federal Constituency; சீனம்: 武吉免登国会议席) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P121) ஆகும். லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1986-ஆம் ஆண்டில் இருந்து லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. லெம்பா பந்தாய்கோலாலம்பூர் மாநகரத்தில், தென் மேற்கு பகுதியில் அமைந்து உள்ள ஒரு புற நகரம். லெம்பா பந்தாய்க்கு அருகில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் செபுத்தே மக்களவைத் தொகுதி, சிகாம்புட் மக்களவைத் தொகுதி, மற்றும் புக்கிட் பிந்தாங் மக்களவைத் தொகுதி. லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் மிகவும் பிரபலமான பகுதிகளில் பங்சார் தொகுதியும் ஒன்றாகும். இந்தப் பகுதி ஒரு பிரபலமான மேல்நிலை குடியிருப்பு பகுதி; மற்றும் ஒரு பொழுதுபோக்கு பகுதியும் ஆகும். பந்தாய் டாலாம்பந்தாய் டாலாம் (Pantai Dalam) என்பது பங்சார் பகுதிக்கு தெற்கே அமைந்துள்ள ஒரு குடியிருப்பு பகுதி. பந்தாய் டாலாம் பகுதியில் பெரிய குடியிருப்புப் பகுதிகளும்; பல சிறிய குடியிருப்புப் பகுதிகளும் கலந்து உள்ளன. அவற்றின் பட்டியல்:
லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதி
லெம்பா பந்தாய் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
லெம்பா பந்தாய் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia