பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Permatang Pauh; ஆங்கிலம்: Permatang Pauh Federal Constituency; சீனம்: 峇东埔联邦选区) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் (Central Seberang Perai District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P044) ஆகும்.[3]
பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி 28 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[4]
இங்கு மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Universiti Teknologi MARA); செபராங் பிறை பல்நுட்பியல் கல்லூரி (Politeknik Seberang Perai); ஆகிய கல்விக் கழகங்கள் உள்ளன.[5] பெர்மாத்தாங் பாவ் நகரம் மலேசியாவின் மிக நீளமான விரைவுச் சாலைக்கு மிக அருகில் உள்ள ஒரு நகரம் ஆகும். புக்கிட் மெர்தாஜாம் மற்றும் கெப்பாலா பத்தாஸ் ஆகிய நகரங்களுக்கு இடையில் பெர்மாத்தாங் பாவ் நகரம் அமைந்துள்ளது.
அரசியல் தாக்கங்கள்
மலேசிய அரசியலில் பல தாக்கங்களை ஏற்படுத்திய நாடாளுமன்றத் தொகுதியாக பெர்மாத்தாங் பாவ் தொகுதி அறியப்படுகிறது. முதன்முதலில் 1982-ஆம் ஆண்டில் அன்வர் இப்ராகீம், இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
1982-1986 (முதலாம் தவணை)
1986-1990 (இரண்டாம் தவணை)
1990-1995 (மூன்றாம் தவணை)
1995-1998 (நான்காம் தவணை)
ஆகிய நான்கு தவணைகள்; மற்றும் 1998-1999-ஆம் ஆண்டில் சுயேச்சையாக ஓர் ஆண்டு பொறுப்பு வகித்தார்.
1999-ஆம் ஆண்டில் இருந்து 2008-ஆம் ஆண்டு வரையிலும், அவருடைய மனைவி வான் அசிசா வான் இசுமாயில் பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பில் இருந்தார். அதன் பின்னர் தம்முடைய கணவர் அன்வர் இப்ராகீம் அவர்களுக்காக, தம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறப்பு செய்தார். அதே ஆண்டில் ஓர் இடைத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் அன்வர் இப்ராகீம் 11,721 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி 28 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[6]
சட்டமன்ற தொகுதி
தேர்தல் வட்டாரம்
குறியீடு
வாக்குச் சாவடி
செபராங் ஜெயா (Seberang Jaya) (N10)
Jalan Sembilang
044/10/01
SMK Seberang Jaya
Seberang Jaya II
044/10/02
SK Seberang Jaya 2
Kampong Pertama
044/10/03
SK Permatang To Kandu
Kampong Belah Dua
044/10/04
SMK Pauh Jaya
Seberang Jaya I
044/10/05
SK Seberang Jaya
Jalan Bahru
044/10/06
SK Jalan Bahru Perai
Simpang Ampat
044/10/07
SMK Permatang Rawa
Jalan Tuna
044/10/08
SK Seberang Jaya 2
Taman Tun Hussein Onn
044/10/09
SMK Tun Hussein Onn
பெர்மாத்தாங் பாசீர் (Permatang Pasir) (N11)
Sama Gagah
044/11/01
SMK Sama Gagah
Permatang Ara
044/11/02
SK Permatang Pasir
Permatang Pauh
044/11/03
SK Permatang Pauh
Bukit Indra Muda
044/11/04
SK Bukit Indera Muda
Kampong Pelet
044/11/05
SJK (C) Kubang Semang
Kubang Semang
044/11/06
SK Seri Penanti
Tanah Liat Mukim 8
044/11/07
SK Seri Penanti
Kampong Cross Street 2
044/11/08
SM Islam Al-Masriyah
Permatang Pauh
044/11/09
SJK (C) Lay Keow
பெனாந்தி (Penanti) (N12)
Guar Perahu
044/12/01
SMK Guar Perahu
Kuala Mengkuang
044/12/02
SMK Guar Perahu Indah
SK Seri Impian
Telok Wang
044/12/03
Dewan Orang Ramai Kampong Tun Sardon Ara Kuda
Mengkuang
044/12/04
SK Mengkuang
Sungai Lembu
044/12/05
SJK (C) Kg. Sg. Lembu
Penanti
044/12/06
SMK Mengkuang
Kubang Ulu
044/12/07
SMK Penanti
Sungai Semambu
044/12/08
SK Tanah Liat
Tanah Liat Mukim 9
044/12/09
SK Tanah Liat
Berapit Road
044/12/10
SJK (C) Jit Sin A Jalan Berapit
SJK (C) Jit Sin B Jalan Berapit
பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி
பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023)
நாடாளுமன்றம்
ஆண்டுகள்
உறுப்பினர்
கட்சி
செபராங் தெங்கா (Seberang Tengah) தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது