பஞ்சாப் கிங்ஸ்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings XI Punjab) என்பது பஞ்சாப்பின் மொகாலி நகரை அடிப்படையாகக் கொண்ட உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணியாகும். இது 14 ஆவது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) எனும் பெயரிற்கு மாற்றம் செய்யப்பட்டது. 2008இல் நிறுவப்பட்ட இந்த உரிமைக்குழுவின் இணை உரிமையாளர்களாக பிரீத்தி சிந்தா, நெஸ் வாடியா, மொகித் பர்மன், கரண் பால் ஆகியோர் உள்ளனர்.[2] இதன் உள்ளக அரங்கமாக பிசிஏ அரங்கம் உள்ளது. 2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இரண்டாமிடம் பிடித்தது. இதுதவிர மற்ற 11 பருவங்களில் ஒருமுறை மட்டுமே தகுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. உரிமைக்குழு வரலாறுசெப்டம்பர் 2007இல், இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இந்தியன் பிரீமியர் லீக் என்ற இருபது20 போட்டித் தொடரை நிறுவியது. 2008ஆம் ஆண்டு தொடங்கவிருந்த முதல் பருவத்திற்காக பெங்களூர் உட்பட இந்தியாவின் 8 வெவ்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளும் 20 பிப்ரவரி 2008 அன்று மும்பையில் ஏலம் விடப்பட்டன. பஞ்சாபைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியை டாபர் குழுமத்தின் மோஹித் பர்மன் (46%), வாடியா குழுமத்தின் நெஸ் வாடியா (23%), நடிகை பிரீத்தி சிந்தா (23%) மற்றும் டே & டே குழுமத்தின் சப்தர்ஷி டே (சிறு பங்குகள்) ஆகியோர் வாங்கினர். அவர்கள் இந்தக் குழு உரிமையைப் பெற மொத்தம் 76 மில்லியன் டாலர்கள் செலுத்தினர். பருவங்கள்
தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ள சாம்பியன்ஸ் லீக் இருபது20 தொடரில் 2014ஆம் ஆண்டு விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அரையிறுதி வரை சென்றது. வீரர்கள் பட்டியல்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia