பத்து பிரண்டாம்
பத்து பிரண்டாம் (ஆங்கிலம், மலாய் மொழி: Batu Berendam, பத்து பெரெண்டாம்) என்பது மலேசியா, மலாக்கா, மலாக்கா தெங்ஙா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். மலாக்கா நகரில் இருந்தும், டுரியான் துங்கல் சிறுநகரில் இருந்தும் 10 கி.மீ., தொலைவில் இருக்கிறது. பத்து பிரண்டாம் புறநகர் பகுதிக்கு அருகில் மாலிம் ஜெயா, செங் ஆகிய ஊர்கள் உள்ளன. இங்கு ஒரு விமான நிலையம் உள்ளது. [1] 1952-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பத்து பிரண்டாம் விமான நிலையம், இப்போது மலாக்கா அனைத்துலக விமான நிலையம் என தகுதி உயர்வு பெற்றுள்ளது. இந்த நிலையம் மலாக்கா, வட ஜொகூர் பகுதிகளில் வாழும் மக்களுக்கு விமானச் சேவை வசதிகளை வழங்கி வருகிறது. புதிய விமானத் தளம் உருவாக்கும் பணிகள் 2006 ஏப்ரல் மாதம் தொடங்கின. மூன்றாண்டுகளுக்குப் பின்னர், 2009 மே மாதம் திறப்பு விழா கண்டது, மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக் புதிய விமான நிலையத்தைத் திறந்து வைத்தார். கட்டுவதற்கு 131 மில்லியன் ரிங்கிட் செலவானது. இந்த நிலையத்தின் மொத்தப் பரப்பளவு 141 ஏக்கர்.[2] மலேசிய வரலாற்றில் பத்து பிரண்டாம் விமான நிலையம்மலேசிய வரலாற்றில் இந்த விமான நிலையம் முக்கியத்துவம் வாய்ந்தது. 1956 பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி, பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரம் பெற்று, லண்டனில் இருந்து திரும்பி வந்த பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், இந்த பத்து பிரண்டாம் விமான நிலையத்தில்தான் தரையிறங்கினார். பின்னர், மலாக்கா நகருக்குச் சென்று பண்டார் ஹீலிர் பிரதான திடலில் சுதந்திரச் செய்தியை அறிவித்தார். அண்மைய காலங்களில் பத்து பிரண்டாம் மிகத் துரிதமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இதன் சுற்று வட்டாரத்தில் நிறைய தொழிற்சாலைகளும் தொழிற்பேட்டைகளும் உருவாகியுள்ளன. 1942-இல் ஜப்பானியர்களால் உடைக்கப்பட்ட மலாக்கா - தம்பின் தொடர்வண்டி தண்டவாளங்களின் சிதைவு பாகங்களை, பத்து பிரண்டாம் கிராமப் புறங்களில் இன்னும் பார்க்க முடியும். தட்பவெப்ப நிலை
பத்து பிரண்டாம் அமைவிடம்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia