மலாக்கா சோங்கர் நடைபாதை
மலாக்கா சோங்கர் நடைபாதை (ஆங்கிலம்: Jonker Walk of Malacca; மலாய்: Persiaran Jonker Melaka; சீனம்: 马六甲鸡场街) என்பது மலேசியா, மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா மாநகரத்தில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா நடைபாதையாகும். இந்தச் சுற்றுலா வளாகம், மலாக்கா சீன நகர் பகுதியின் ஜோங்கர் தெருவில் (மலாய்: Jalan Hang Jebat) அமைந்துள்ளது.[1] இந்த நடைபாதை, 1650-ஆம் ஆண்டில் இடச்சுக்காரர்கள் கட்டிய மலாக்கா இசுடேதிசு மண்டபத்திற்கு (இடச்சு மொழி: Stadthuys) அருகே தொடங்கி மலாக்கா ஆற்றைக் கடந்து செல்கிறது. பொதுசோங்கர் நடைபாதையின் இடது வலது பக்கங்களில் வரலாற்று கட்டிடங்கள் நிறைந்து உள்ளன. அந்த வரலாற்று கட்டிடங்கள் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சோங்கர் நடைபாதையின் இருபுறங்களிலும் பழங்கால பொருட்கள், ஜவுளிகள், உணவுகள், கைவினைப் பொருட்கள், நினைவுப் பொருட்கள், ஆடைஆபரணங்கள் போன்ற பொருட்களை விற்கும் பல கடைகள் உள்ளன.[2] இந்தப் பகுதி ஒவ்வொரு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இரவு சந்தையாக மாறும். அந்த நாட்களில் வாகனப் போக்குவரத்திற்கு ஜோங்கர் தெரு மூடப்படும்.[3] சுற்றுலா இடங்கள்மலாக்கா சோங்கர் நடைபாதையைச் சுற்றியுள்ள தெருக்கள் மற்றும் இடங்கள்:
சோங்கர் நடைபாதை காட்சியகம்மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia