பெரும்பாலை
பெரும்பாலை (Perumbalai ) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643663.[1] இது பெரும்பாலை ஊராட்சிக்கு உட்பட்டது. அமைவிடம்இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 326 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°57'45.2"N 77°56'17.9"E[2] மக்கள் வகைப்பாடு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 2098, மொத்த மக்கள் தொகை 8045.[3] இதில் 4219 ஆண்களும், 3826 பெண்களும் அடங்குவர். ஊரில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 55.7 % ஆகும்.[4] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும் மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia