சமரதுங்கன்
சமரதுங்கன் அல்லது மகாராஜா சமரதுங்கன் (ஆங்கிலம்: Samaratungga; இந்தோனேசியம்: Srī Mahārāja Samaratungga; ஜாவானியம்: Srī Mahārāja Samaragrawira) என்பவர் மத்திய ஜாவாவில், கலிங்க இராச்சியத்தின் சைலேந்திர வம்ச வழித்தோன்றல்களில், கிபி 812 முதல் கிபி 833 வரை சிறீவிஜய பேரரசை ஆட்சி செய்த அரசர் ஆவார். அத்துடன் இவர், அந்தக் காலக்கட்டத்தில் (8-ஆம் - 9-ஆம் நூற்றாண்டுகள்) சிறீவிஜயத்தை ஆட்சி செய்த மாதரம் இராச்சியத்தின்; சைலேந்திர வம்சத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். தன் முன்னோடிகளைப் போல விரிவாக்கத்தில் தீவிர ஈடுபாடுகளைக் காட்டாமல்; தம் ஆட்சிக் காலத்தில், மதம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கியுள்ளார். மன்னர் தரணிந்திரனின் வாரிசான இவரின் பெயர், 824-ஆம் ஆண்டு காராங்தெங்கா கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]:92 வரலாறுகிபி 824-ஆம் ஆண்டு, காராங்தெங்கா கல்வெட்டின் (Karangtengah inscription) பதிவுகளின்படி,[2] மத்திய ஜாவா மெண்டுட் கோயில் அல்லது மத்திய ஜாவா நிங்காவென் கோயிலுடன் தொடர்புடைய வேணுவன கோயிலின் (Venuvana temple) கட்டுமானத்திற்கும் பொறுப்பேற்றார். உலகின் மிகப்பெரிய பௌத்த ஆலயமாகக் கருதப்படும் போரோபுதூர் ஆலயம் கட்டப்படுவதற்கு முன்னோடியாக இருந்த சமரதுங்கன், மத்திய ஜாவா பாவோன் கோயிலின் சீரமைப்பிற்கும் பொறுப்பேற்று இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. போரோபுதூர்அவரின் ஆட்சிக் காலத்தின் போது, பௌத்த நினைவுச் சின்னமான போரோபுதூர் கட்டுமானத்தைத் தொடங்கினார்.[3] இருப்பினும் இவர் காலத்தில் போரோபுதூர் கட்டி முடிக்கப்பட்டவில்லை. ஐந்து நிலைகளில் போரோபுதூர் கட்டுமானம் நடைபெற்றுள்ளது.[4] போரோபுதூரின் கட்டுமானம் 760 அல்லது 770-ஆம் ஆண்டுகளில் தொடங்கி இருக்கலாம் என்றும்; கி.பி 830 வரை தொடர்ந்து இருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர் மிக்சிக் (John N. Miksic) கூறுகிறார். கிபி 779, கிபி 780, கிபி 792, கிபி 824, கிபி 833 என ஐந்து நிலைக் கட்டுமானங்களில், சமரதுங்கனின் ஆட்சியின் போது நான்காம் கட்டுமானம் நடைபெற்று இருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கூறுகின்றனர்.[5][6][7] வாழ்க்கைசிறீ விஜயப் பேரரசின் அரசர் தருமசேதுவின் மகள் இளவரசி தேவி தாராவை (Dewi Tara) சமரதுங்கன் மணந்தார். இது சைலேந்திரர்களுக்கும் |சிறீ விஜயர்களுக்கும் இடையே நெருக்கமான அரசியல் கூட்டணியை உருவாக்கியது. சமரதுங்கனுக்கு பாலபுத்திரன் என்ற ஒரு மகனும், பிரமோதவர்தனி என்ற ஒரு மகளும் இருந்தனர். சமரதுங்கன் இறந்த பிறகு, பிரமோதவர்தனி சஞ்சய அரச மரபைச் சேர்ந்த சைவ சமய ராக்காய் பிக்கத்தான் என்பவரை மணந்தார். மத்திய ஜாவா மீதான பாலபுத்திரனின் அதிகாரத்தைக் கைப்பற்றிய ராக்காய் பிக்கத்தான், பாலபுத்திரனை ஜாவா தீவை விட்டு வெளியேற்றினார்.[1]:108 சமரதுங்கனின் ஆட்சிக் காலத்தில், இரண்டாம் செயவர்மன், மீக்கோங் படுகையில் உள்ள இந்திரபுராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[8]:97[9]:353–354 பின்னர் இரண்டாம் செயவர்மன், சைலேந்திரர்கள் மற்றும் சிறீ விஜயத்தினர்களின் தொடர்புகளில் இருந்து விலகிக் கொண்டு கெமர் பேரரசு எனும் ஒரு புதிய கெமர் அரசை உருவாக்கினார்.[10][11] மேலும் காண்கமாதரம் இராச்சியத்தின் மன்னர்கள்மேற்கோள்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia