மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு
மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு அல்லது இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு (மலேசியா) (மலாய்: Kementerian Belia dan Sukan Malaysia (KBS); ஆங்கிலம்: Ministry of Youth and Sports Malaysia) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சு இளைஞர்கள், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஓய்வு நடவடிக்கைகள், விளையாட்டு அரங்கங்கள், இளைஞர் மேம்பாடு மற்றும் இளைஞர் அமைப்புகளுக்குப் பொறுப்பாகும். வரலாறுமலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் ஆரம்பக் கால உருவாக்கம் 1953-இல் மக்கள் நலன் திணைக் களத்தின் (Department of Public Welfare) கீழ் ஒரு கலாசாரப் பிரிவாகத் (Culture Division) தொடங்கியது. அந்த நேரத்தில், மலேசியாவின் இளைஞர் விவகாரங்கள்; மற்றும் அவர்கள் தொடர்பான அனைத்து விசயங்களைக் கையாளும் பொறுப்பு; அந்தக் கலாசாரப் பிரிவுக்கு வழங்கப்பட்டது.[3] பின்னர் 1964-இல், அந்தக் கலாசாரப் பிரிவு தகவல் அமைச்சின் (Ministry of Information) கீழ் கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்தத் தகவல் அமைச்சின் கீழ் ஓர் இளைஞர் பிரிவு; மற்றும் ஒரு விளையாட்டு பிரிவும் (Sports Division) உருவாக்கப்பட்டது.[4] கலாசாரம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுமலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு; 15 மே 1964-இல் தேசிய இளைஞர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் (National Youth Day) அறிமுகமானது. 1972-இல், மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சில், கலாசாரப் பிரிவு எனும் ஒரு பிரிவும் இணைக்கப்பட்டது.[4] அதனால் மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு (Ministry of Youth and Sports); கலாசாரம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு (Ministry of Culture, Youth and Sports) எனப் பெயர் மாற்றம் கண்டது. 1987-ஆம் ஆண்டு வரை அந்தப் பெயர் மாற்றம் நீடித்தது.[3] அதன் பின்னர் கலாசாரப் பிரிவு; வேறு ஓர் அமைச்சான கலாசாரம், கலை மற்றும் சுற்றுலா அமைச்சின் (Ministry of Culture, Arts and Tourism) கீழ் கொண்டு வரப்பட்டது. அப்போது இருந்து (1987), மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு அதன் அசல் பெயருக்கு மாற்றப்பட்டது. இன்று வரை அப்படியே அழைக்கப் படுகிறது. அமைப்பு
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia